புதன், 21 டிசம்பர், 2016

சீனாவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக மாணவிகள்.!!

சீனாவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த  தமிழக மாணவிகளை கண்டுகொள்ளாத ஊடகங்களும்.!!

எந்த பொறுப்பும் ஏற்காத சசிகலாவுக்காக குரல்கொடுக்கும் தமிழக அமைச்சர்களும்.!!


சென்னை : 22,டிசம்பர்,2016
 
சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவில், பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வி மற்றும் பிரியதர்சினி ,ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்று சென்னை திரும்பினர்.

சீனாவின் விவான் நகரில், ஆசிய பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த #தமிழ்ச்செல்வி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், வெள்ளிப் பதக்கமும், #ப்ரியதர்ஷினி மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி #ராமலெட்சுமி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

முன்னால் முதலமைச்சர் #ஜெயலலிதா, உத்தரவுப்படி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட மிகச்சிறப்பான பயிற்சிகள் காரணமாகவே, தங்களால் இந்த வெற்றியைப் பெறமுடிந்தது என சீனாவிலிருந்து பதக்கங்களுடன் சென்னை திரும்பிய மாணவிகள் பெருமிதம் தெரிவித்தனர்.

தாங்கள் சீனா செல்ல நிதியுதவி வழங்கிய முன்னால் முதலமைச்சர் #ஜெயலலிதாவுக்கு மாணவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

சாதனை மாணவிகளை நாம் வாழ்த்துவோம்..!!

வாழ்த்துக்களுடன் :
                               தேர்போகி விஜய்

சீனாவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக மாணவிகள்.!!

சீனாவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த  தமிழக மாணவிகளை
கண்டுகொள்ளாத ஊடகங்களும்.!!

எந்த பொறுப்பும் ஏற்காத சசிகலாவுக்காக குரல்கொடுக்கும் தமிழக அமைச்சர்களும்.!!

சென்னை : 22,டிசம்பர்,2016
 
சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவில், பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வி மற்றும் பிரியதர்சினி ,ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்று சென்னை திரும்பினர்.

சீனாவின் விவான் நகரில், ஆசிய பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த #தமிழ்ச்செல்வி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், வெள்ளிப் பதக்கமும், #ப்ரியதர்ஷினி மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி #ராமலெட்சுமி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

முன்னால் முதலமைச்சர் #ஜெயலலிதா, உத்தரவுப்படி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட மிகச்சிறப்பான பயிற்சிகள் காரணமாகவே, தங்களால் இந்த வெற்றியைப் பெறமுடிந்தது என சீனாவிலிருந்து பதக்கங்களுடன் சென்னை திரும்பிய மாணவிகள் பெருமிதம் தெரிவித்தனர்.

தாங்கள் சீனா செல்ல நிதியுதவி வழங்கிய முன்னால் முதலமைச்சர் #ஜெயலலிதாவுக்கு மாணவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

சாதனை மாணவிகளை நாம் வாழ்த்துவோம்..!!

வாழ்த்துக்களுடன் :
                               தேர்போகி விஜய்

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

அன்பான என் ஆயர்குலத்திர்க்கு வணக்கம்🙏🙏


 சகோதர, சகோதரிகளே நாம்  ஜாதி சான்றிதழில் மட்டும் யாதவ் என்று போட்டு கொண்டால் போதுமா? முடிந்த வரையில் இனி வரும் தலைமுறை நமது அடுத்த சந்ததிகளுக்கு பெயர் வைக்கும் போது எடுத்துகாட்டாக

கேசவ கிருஷ்ணன்
நவநீத கிருஷ்ணன்
யது கிருஷ்ணன்
யாதவ கிருஷ்ணன்
வருன் கிருஷ்ணன்

கோகுல கண்ணன்
ரமேஷ் கண்ணன்
ராஜேஸ் கண்ணன்

நம் குழந்தைகள் பெயருக்கு பக்கத்தில் கிருஷ்ணன் or கண்ணன் என்று பார்த்து வைக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிரேன்.

இந்தியாவில் பொதுவாக உயர்ந்த சமுதாயம் யார் என்று கேட்டால் ஐய்யர் என்று சொல்வார்கள், சரி அப்படியே வைத்து கொள்வோம் அந்த ஐய்யர் வீட்டு பூஜை அறை யில் போய் பாருங்கள் கிருஷ்ணன் இருப்பார்,யார் இந்த கிருஷ்ணன் ஒரு இடையன், அப்படியென்றால் இடையன் யார்? இந்த கேள்வியே உங்களிடமே விட்டு விடுகிரேன்.

நாங்கள்தான் ஆண்ட இனம் என்று பீத்திகொள்ளும் சமுதாயங்கள் 17 ம் நூட்றாண்டுக்கு முன் இவர்களின் வரலாறு என்னெவென்று கேலுங்கள் அவர்களுக்கே தெரியாது, ஆனல் உன் முப்பாடன் ஆனந்தகோன் 11 ம் நூட்றாண்டில் செஞ்சியே கட்டி ஆண்டவன் 1100ல் இருந்து 300 வருடங்கள் கோனார் ஆண்டுள்ளார்கள் அதர்க்கு செஞ்சிகோட்டயே சான்று.

நீ ஒளவைக்கு அர்புத கனி கொடுத்த அதியமானின் பரம்பரை.

பாண்டியனின் வம்சம் நீ, அதை நான் சொல்லவில்லை, இந்த உலகத்திர்க்கு மகா பாரதம் தந்த வீயச மாமுனிவரின் எழுத்துக்கள் செல்கிறது, பாண்டியன் சந்திர வம்சத்தை சேர்ந்தவன் என்பதற்கு வியாச மாமுனிவரே சான்று.

கம்பனின் ராமயனத்தில் சாரா நதியே பட்றி குறிப்பிடும் போது, அந்த நதியில் இடைச்சிகளின் ஆடைகள் அடித்து செல்லபட்டது என்று சாரா நதியே வர்னித்து இருப்பார். ஆக ராமாயண காலத்திலே இடையன் வாழ்ந்திருக்கிரான் என்பதற்கு கம்பனே சான்று.

5 நிலத்தில் வாழ்ந்த எவருக்கும் அரசன் என்கிற பட்டம் உன்னை தவிர யாருக்கும் இல்லை, என்ன புரியவில்லையா முல்லை நிலத்தில் வாழ்ந்த உனக்குதான் "கோன்' இதர்க்கு தமிழில் அரசன் என்று பொருள்.

கோவலன் அவரின் மனைவி கன்னகியே ஒரு இடையர் வீட்டில்தான் தங்கவைத்துவிட்டு வெளியில் சென்றார்.

ஏறுதழுவல் உன்னுடைய விளையாட்டு நான் சொல்லவில்லை, கலி தொகை சொல்கிறது.

கடை ஏழு வள்ளல்கள்:
பேகன்
பாரி
காரி
ஆய்
அதிகன்
நள்ளி
ஓரி
       யார் இவர்கள் உன் பரம்பரையே சேர்ந்தவர்கள்தான் இவர்களும்.

ஆநந்தரங்க பிள்ளை முதன் முதலில் கப்பல் ஓட்டிய தமிழன், ஒரு இடையன் என்பதற்காக அது மறைக்கப்பட்ட கொடுமை.

ஆநாந்தகோன் - செஞ்சிகோட்டையே கட்டியவர்
கிருஷ்ணகோன்- கிருஷ்ணகிரி கோட்டையே கட்டியவர்,
                   யாருக்காவது தெரியுமா இந்த மாமன்னர்களை பட்றி 17ம் நூட்றாண்டுக்கு பின் வந்தவர்களை புகழ் பாடும் இந்த திருட்டு திராவிட கும்பலுக்கு ஏன் இடையன் மீது இவ்வளவு ஏட்றதாழ்வு என்பது இதுவரை புரியாத புதிர்தான்.

ஒளரங்கசீப்பை ஓட ஓட விரட்டி அடித்தவன் நம் வீர சிவாஜி, மராட்டிய தலைவன்.

ஹரி இந்த உலகத்தை படைத்தார்
ஹரி பிரம்மனை படைத்தார்

பிரம்மன் ஏழு ரிஷிகலே படைத்தார்
அதில் ஒருவர்தான் சந்திரன்.

இந்த சந்திர வம்சத்தில் வந்தவர்கள்தான் யாதவர்கள், என்ன புரியவில்லையா விளக்கம் தருகிரேன் பொருமையாக படியுங்கள்,

சந்திரனுக்கு, தட்சன் தனது 60 மகள்களில் 27 மகள்களெ சந்திரனுக்கு கட்டி கொடுத்தார், திருவாதிரை
ரோகினி
மூலம்
புனர்பூசம்
இது போன்ற 27 நட்சத்திரங்கள் சந்திரனுக்கு கட்டி வைக்கப்பட்டது.
இதில் சந்திரன் அன்பாக இருந்தது ரோன்கினி நட்சத்திரதிடம்தான்.

தேவர்களின் குல குருவான பிரகஸ்பதி யின் மனைவி தாரை யின் அழகில் சந்திரன் மயங்கி, தாரையே தூக்கி சென்று விட்டார். இதனால் கடும் கோபம் அடைந்த பிரகஸ்பதி பிரம்மனிடம் முறையிட்டார், சந்திரன் அசுர குலகுருவான சுக்ராச்சாரியிடம் தஞ்சம் அடைந்தார்.

பிறகு பிரம்மன் தலையிட்டு தாரையே மீட்டு பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார், அப்போது சந்திரனின் கரு தாரையின் வயிட்றில் இருந்தது, அதனால் தாரையே பிரகஸ்பதி ஏட்றுகொல்லவில்லை.

சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்த மகன் புதன்.

புதனுக்கும் இலை என்கிர பென்னுக்கும் பிறந்தவர் தான் ஆயூஸ் மன்னன்

ஆயூ மன்னனுக்கு பிறந்தவர்தான் புரூருவஸ்.

புரூருவஸ்க்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர்தான் நகுசன்

நகுசனுக்கு 5 பிள்ளைகள் அதில் மூத்தவர்தான் யயாதி

யயாதியின் மூத்த மனைவி தேவையானிக்கும் பிறந்தவர்கள்தான்

# யது ( நம் முப்பாட்டன்)

# துர்வசு (  சின்ன முப்பாட்டன்)

யயாதியின் இரண்டாவது மனைவி சர்மிஸ்டை இவலுக்கு மூன்று மகன்கள்

# திரஹ்யூ

# அனூ

# புரு

யாயாதி மன்னனுக்கு இளைமை தேவையானியின் தந்தை சுக்ராசாரியரால் பரிபோகிரது
விமோச்சனம் என்ன என்று கேட்டதர்க்கு உன் மைந்தர்கள் யார் இளைமையே தருகிரார்கலோ நீ பெட்று கொல்லலாம் என்றார் சுக்ராசாரியார். என்ன காரனம் என்றால் தன் மகளுக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டமையால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

இளமையே எல்லா மைந்தர்களும் மருத்துவிட கடேசி மைந்தன் புருவாள் கிடைகிரது, அதனால் அரசாட்சி யது, துர்வசுக்கு மருக்கபட்டு புருவுக்கு நாடு வழங்கபட்டது.

புரு மன்னனுக்கு பிறகு வந்தவர்கள்

ஜனனேஜெயன்
பிரசாவன்
சாயதி
திடன்
நீலன்

துஷ்யந்தன்-சகுந்தலை (இவள் ஒரு யாதவ பென்)
பரதன்
பெளமன்
சுகேத்திரன்
அஸ்தன்-அஸ்தினா புரம் என்று பெயர் வரக் காரனமாய் இருந்தவன்.

நிகும்பன்
அரசமீளி
வருணன்
குரு- இவர்தான் கெளரவர்கள் என்கிர பட்டத்தை வாங்கியவர்.

பிரதீபன்

சந்தனு

பீஸ்மர்

சித்திர வீரியன்

          1.திருதிராஷ்டன்
         
           2.பாண்டு

திருதிராஸ்டனின் மைந்தர்கள் துரியோதனன் என்கிர இடையன்.
 எப்படி இடையன் ஆக முடியும் என்ற சந்தேகமா?

திருதிராஷ்டனின் மனைவி காந்தாரி
யார் அந்த காந்தாரி??

யதுவின் தம்பி துர்வசுவின் வழியில் வந்தவல்தான் இந்த காந்தாரி.

பாண்டுவின் மைந்தர்கள்

1.தர்மன்
2.பீமன்
3.அர்ச்சுனன்
4.நகுலன்
5.சகாதேவன்

     இவர்களும் யாதவர்கள்தான், என்ன சந்தேகமா???

பாண்டுவின் மனைவி குந்தி யார் என்று தெரியுமா???

மூத்த மகன் யதுவின் வம்சத்தில் பிறந்தவள்தான் இந்த குந்தி.

  மூத்த மகன் யதுவுக்கு பட்டத்தையும் பதவியயும் வாங்கி கொடுக்கவே கிருஷ்ணன் யது குலத்தில் யாதாவனாக அவதரித்தார்.

பாராத போருக்கு பின் காந்தாரி சாபத்தல் யதவர் இனமே முலுமையாக அழிந்து போனது.

ஒரு நாள் மேலிருந்து கீழாக கிருஷ்ணன் பார்த்தார், கங்கை, யமுனையுடன் சேர்ந்து கன்னீர் நதியும் ஓடியது,
திகைத்தி போன கிருஷ்ணன் கீழே வந்தி பூம தேவியுடன் கேள்வி கேட்டார், அதர்க்கு பூமி அன்னை சென்ன பதில் ' பிரபுவே இந்த பாவ லோகத்தில் இந்த பாவியர்கலை என்னால் சுமக்க முடியவில்லை, யாதவர்களின் கால் தடங்கள் திரும்ப பட்டால்தாந் இது மோட்சம் அடையும் என்று பூமி அன்நை சொல்ல உடனே 9 இடங்களில் ஆயர் இனம் அவதரிக்கப்பட்ட்து.

இடையனே இடையனே உன் வரலாறு இது

கேட்டு விட்டு திகைத்து விடாதே.

மனிதனாய் பிறப்பது எளிது ஆனால் யாதவராய் பிறப்பது அரிது.
யாவரும்  வாழட்டும் யாதவரே ஆளட்டும்.
வாழ்க யாதவம், வழர்க பாரதம்.

*அன்பு யாதவ உறவுகளுக்கு வணக்கம்.!!

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவைச் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமாக நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறோம்.மேலூரில் மற்றஎல்லாச் சமூகத்தினருக்கும் திருமண மண்டபம் உள்ளது. நம் *யாதவ* சமுதாயத்திற்கென்று மண்டபம் இல்லை. பெருவாரியான மக்களாக வசிக்கும் நமக்கு நம் இனத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் வகையில் மண்டபம் இல்லாதது உண்மையில் அனைவருக்குமே மனவருத்தத்தை அளிக்கக்கூடிய விசயமாகவே இருக்கிறது.நம் சொந்தங்கள் எத்தனையோ பேர்கள் அரசுப் பணிகளிலும்,தனியார் நிறுவனங்களிலும்,சொந்தமாக தொழில் செய்பவர்களாகவும்,பொருளாதார ரீதியில் ஓரளவுக்கு முன்னேறிய நிலையிலேயே இருக்கிறோம்.நாம் நினைத்தால் மண்டபம் கட்டும் பணியை மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க இயலும். இந்தப் பணியை *மேலூர் தாலுகா யாதவர் இளைஞர் நலச் சங்கம்* கையில் எடுத்திருக்கிறது. அதற்காக இந்தியா மட்டுமில்லாமல், வெளி நாடுகளிலிருந்தும் தாராளமாக நிதியுதவியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்டபம் கட்டும் பணிக்கு *ஒரு கோடி ரூபாய்* மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. நன்கொடையாக ரூபாய் ஐயாயிரமும்(₹5000/) அதற்கு மேலும் வழங்குபவர்களின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்படும். ரூபாய் ஒரு லட்சம்(₹100000/)வழங்குபவர்களின் புகைப்படம் மண்டபத்தில் வைக்கப்படும்.
அதேபோல் பணமாக மட்டுமில்லாமல் கட்டிடப் பணிக்குத் தேவையான பொருட்களாகவும் வழங்கலாம்.

உங்கள் ஒவ்வொருவரின் உதவியையும் மேலூர் தாலுகா யாதவர் இளைஞர் நலச் சங்கம் எதிர்நோக்கியுள்ளது. உங்களின் மேலான ஆதரவு எங்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. நமக்காகவும்,நமது நாளைய சந்ததிகளுக்காகவும் தொலைநோக்குப் பார்வையோடு நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உங்களது பங்களிப்பை இயன்ற அளவு வாரி வழங்குமாறு உங்களின் பாதம் பணிந்து வேண்டிக் கொள்கிறோம்....

என்றும் சமுதாயப் பணியில்.....
*மேலூர் தாலுகா யாதவர்  இளைஞர் நலச் சங்கம்*

*தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்* :
+91 9094391800
+91 9585737309

வியாழன், 1 டிசம்பர், 2016

உலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதனை.!!!

Posted By | நாட்டு நடப்பு | 2/12/2016



அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர், கே.ஆர். ஸ்ரீதர்.

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

 செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை.

முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர்.

 அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.

 தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர்.

சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான்.

ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.

காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.

அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் . இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

#தேர்போகி விஜய்

உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் திடுக் நடுக் தகவல்கள்!!


ஜெயலலிதா உடல் நலம் பற்றி பகீர் கிளப்புகிறார்.. அப்போலோ தலைவர் ரெட்டி..!!!


வீடியோவை பாருங்க மிஸ்பண்ணாதீங்க…


பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதற்கு அப்போலோ மருத்துவமனையே சாட்சி…!மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா அட்மிட் ஆகி 60 நாட்கள் ஆகிவிட்டது.

பொது நோயாளிகளின் வரவு மிகவும் குறைந்து விட்டது. இதனால் ஏகப்பட்ட  நஷ்டம்..!

முதல்வர் குணமாகியும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என்ற வருத்தம் மருத்துவமனை தலைவர் ரெட்டிக்கு உண்டு..!

இது துகுறித்து அப்போலோ மருத்துவமனை தலைவர்,
முதல்வர் நிலைக்குறித்து மனம் திறக்கிறார்.

வீடியோவை பாருங்க மிஸ்பண்ணாதீங்க…

புதன், 30 நவம்பர், 2016

ஆஸ்திரேலியாவில் ஒரு சக்கரம் இல்லாமல் ஹெலிகாப்டரை இறக்கிய பயிற்சி விமானி - வீடியோ.!!


ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகரில் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ‘பஸைர்‘ என்ற நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ‘பைப்பர் வாரியர்’ ரக ஹெலிகாப்டரில் வழக்கம்போல் பிரிஸ்பேன் விமான நிலையை ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பயிற்சி விமானி, வானத்தில் பறந்து கொண்டிருந்தார்.

ஓடுதளத்தில் இருந்து உயர கிளம்பிய பின்னர் அந்த ஹெலிகாப்டரின் இடதுப்புற சக்கரம் காணாமல் போயிருந்ததை அறிந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஓடுபாதையில் இருந்து உயரக்கிளம்பியபோது, மூன்று சக்கரங்களில் ஒன்று கீழே கழன்று விழுந்திருக்கலாம என்பதை யூகித்துக் கொண்ட அதிகாரிகள் அந்த ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்க வேண்டுமே.., என்ற கவலையில் மூழ்கினர்.

அதை ஒட்டிச்சென்ற பயிற்சி விமானிக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் உள்ள எரிபொருள் தீரும்வரை வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்த அந்த பயிற்சி விமானி, மூன்று சக்கரங்களில் ஒன்ற இழந்திருந்த அந்த ஹெலிலாப்டடை இரண்டே சக்கரத்தின் உதவியுடன் சாதுர்யமாகவும், பத்திரமாகவும் தரை இறக்கினார்.

செவ்வாய், 29 நவம்பர், 2016

உலகில் குறைவான செலவில் வாழக் கூடிய நகரங்கள் இவைதான்!!!

உலகில் குறைவான செலவில் வாழக் கூடிய நகரங்கள் இவைதான்!!!

 உணவு, எரிபொருள், தங்கும் செலவு என அனைத்தும் குறைவாக செலவாகும் நகரங்கள் கொண்ட பட்டியலைத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் ஆய்வு செய்துள்ளது.

அதில் இருந்து உலகம் முழுவதும் மலிவாக வாழக்கூடிய எட்டு மலிவான நகரங்களின் பட்டியல்..

#புது டெல்லி

மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் புது டெல்லி இடம் பெற்றுள்ளது. இங்கு வாங்கும் சம்பளத்தில் உணவு, உங்கள் செலவு அனைத்தையும் எளிதாகச் செய்ய இயலும் என்று கூறப்படுகிறது.

#கராச்சி:

உணவு, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை இங்கு மலிவான விலையில் கிடைக்கும். வீடும் குறைவான விலையில் கிடைக்கும் ஆனால் இங்கு இருக்கும் ஒரே பிரச்சனை அதிகப்படியான குற்ற நடவடிக்கைகள் ஆகும்.

#சென்னை:

இந்தியாவின் வளர்ந்து வரும் பெருநகரங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இங்கு உள்ள மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் சேரிகளில் வசிக்கின்றனர்.

#அல்ஜேரியா:

அல்ஜீரியாவின் தேசிய தலைநகரான இங்கு அடர்த்தியான மக்கள் தொகை, சேரி போன்றவர்களில் மக்கள் வசிப்பதினால் உணவு, போக்குவரத்து, வீடு போன்றவை மலிவான விலையில் கிடைக்கும்.
இங்கு உள்ள வெள்ளை மாலிகைகள் உலகளவில் மிகவும் பிரபலம்.

#அள்மாடி,

கஜகஸ்தான் இங்கு வீடுகளை வாங்குவது கடினம் ஆனால் நிறைய அப்பார்ட்மெண்ட் பிளாட்கள் கிடைக்கும்,

இந்த பிளாட்டுகள் அனைத்தும் ஒரு மத்திய பினையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் அதனால் விலையும் குறைவாக இருக்கும்.

#மும்பை:

இந்தியாவில் அதிக மக்கள் நெருக்கம் மற்றும் மக்கள் தொகை உள்ள நகரம் என்றால் அது மும்பை. இந்தியாவின் முக்கிய கோடிஸ்வரர்களில் பலர் இங்கு இருக்கின்றனர். ஆனால் உணவு, போக்குவரத்து, வீடுகளின் வாடகை பொன்றவை குறைவாகவே உள்ளன.

#பெங்களூரு:

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கோட்டையான பெங்களூரு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கோட்டையான பெங்களூருவில் சம்பளத்திற்கு ஏற்றார் போல குறைவான விலை முதல் அதிக விலையுள்ள வீடுகள் எளிதாக வாடகைக்குக் கிடைக்கும்.

#சாம்பிய

சாம்பியாவின் தலைநகரான ல்யூஸாகா அங்கு மிகப் பெரிய நாரமாகும். இங்கு வாழக் குறைவான செலவே ஆகிறது.ஆனால் இங்கு உணவு, போக்குவரத்து, பள்ளி கட்டணங்கள் போன்றவை அதிகம் தான்.

2 hours ago #சிட்னி: 29/11/2016


338 பயணிகளுடன் பயணித்த விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னியிலிருந்து சிங்கப்பூர் பயணித்த Scoot விமான நிறுவனத்திற்கு சொந்தமான The Boeing 787 Dreamliner என்ற விமானத்திலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வீடியோவில் விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருக்கும் போது அதன் வலது இறக்கையிலிருந்து தீப்பொறி வருகிறது. இதைக்கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

எனினும், விமானம் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக எந்த வித கோளாறு இன்றி சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து Scoot விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது, சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தில் வலது இன்ஜினில் தீப்பொறி வந்தயை அவர் உறுதி செய்துள்ளார்.

இதையறிந்த விமான குழுவினர் உடனே சிங்கப்பூர் விமான நிலையத்தை தொடர்புக்கொண்டு தீயணைப்பு துறையை தயார் நிலையில் இருக்கும் படி தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தரையிறக்கப்பட்ட விமானத்தை ஆய்வு செய்ததில் வலது இன்ஜினில் எந்த கோளாறும் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், பறவை ஏதேனும் இன்ஜினில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 28 நவம்பர், 2016

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் முதல் #தமிழ் விமானி…!!!


PicsArt_11-28-11.45.29.png
கடும் போட்டிகளுக்கு மத்தியில் பல வருடங்கள் தொடர்ந்தும் மேற்கொண்ட கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக, எனது ( தயாளன் ) “இலக்கும் கனவும் உண்மையாக மாறியதையிட்டு நான் உண்மையில் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் எயார் பஸ் ஏ 320 விமானத்தின் முதல் விமானி பதவி தயாளனுக்கு கிடைத்துள்ளது.
இலங்கையின் தேசிய கொடியை நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் ஒரே யாழ்ப்பாண தமிழன் என்ற வகையில் எனக்கு புதுமையான மகிழ்ச்சி ஏற்படுகிறது.
எனது இந்த பயணத்திற்கு எனக்கு ஆதரவு வழங்கிய எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
நீண்டகாலத்திற்கு முன்னர் உங்களில் பலரை நான் விரைவில் வானில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் என
 #தயாளன் குறிப்பிட்டுள்ளார்.

பறக்கும் விமானத்தில் பயணிகளுடன்... பணிப்பெண்கள்! - பகீர் தகவல்..!!


பறக்கும் விமானத்தில் பயணிகளுடன் பணிப்பெண்கள் செக்ஸ் உறவு கொள்ளும் விஷயம் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

 இதில் விமான நிறுனவங்களில் வேலை செய்பவர்களில், சுமார் 89 சதவீதம் பேர் பறக்கும் விமானத்தில் விதிகளை மீறி செயல்படும் விஷயம் தெரியவந்தது.

சுமார் 718 விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பறக்கும் விமானத்தில், பல்வேறு விதங்களில் பணியாளர்கள் விதிகளை மீறி செயல்படும் விஷயம் தெரியவந்தது. சுமார் 21 சதவீத பணிப்பெண்கள், தங்களது சக பணியாளர்களுடன் பறக்கும் விமானத்தில் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தவிர, 14 சதவீத பெண் பணியாளர்கள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டு விதிகளை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, 20 சதவீதம் பேர் பயணிகளுக்கு சில்லரை கொடுப்பதில் தவறு செய்கின்றனர். அதிக வேறு நாட்டு பணமாகவும், சில்லரையை குறைத்து கொடுப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான பயணிகள் சில்லரையை சரிபார்க்காததும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. மேலும் சிலர், ‘டூட்டி பிரி’ பொருட்களில் ஊழல் செய்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 7 சதவீதம் பேர் பயணிகளிடமிருந்து பரிசுப்பொருட்களும், டிப்ஸ் ஆகியவை பெருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சனி, 26 நவம்பர், 2016

டிரம்ஸ் வாசிப்பில் உலக சாதனை படைத்த ஷிருஷ்டி.!!!


சாதிக்க நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் அந்தச் சாதனையை சிலர் மட்டுமே வெற்றி காண்கிறார்கள். அந்த வரிசையில் தான் கற்றக் கலையை கொண்டு எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பி அசத்தியிருக்கிறார் ஷிருஷ்டி.

 உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது ஷிருஷ்டி படிதார் என்ற பெண் சமீபத்தில் தொடர்ச்சியாக டிரம்ஸ் இசைக்கருவியை வாசித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.

உத்திரப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள பல்டா என்ற சிறிய கிராமம் தான் ஷிருஷ்டியின் சொந்த ஊர். இவருக்கு டிரம்ஸ் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். அவர் வாழ்ந்த கிராமத்தில் அதற்கான வசதி இல்லாததால் இந்தூர் நகரில் உள்ள பப்லூ சர்மாவிடம் டிரம்ஸ் கற்க அவரிடம் சேர்ந்தார். ஆனால் தன்னுடைய அதிக ஆர்வத்தால் அதைச் சீக்கிரமாகவே கற்றுக்கொண்டார்.

தனக்கு நன்றாக டிரம்ஸ் வாசிக்கத் தெரியும் என்று எத்தனைப் பேருக்கு சொல்லமுடியும். அதனால் எல்லோருக்கும் தன் டிரம்ஸ் வாசிக்கும் சத்தத்தை கேட்க வேண்டும் என்று எண்ணிய ஷிருஷ்டி, தானாகவே முன்வந்து இந்தூரில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் தொடர்ச்சியாக 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து, உள்ளூர் மட்டும் அல்ல உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12.30 மணிக்கு டிரம்ஸ் வாசிக்க ஆரம்பித்த ஷிருஷ்டி, மறுநாள் அதாவது செவ்வாய் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக வாசித்துள்ளார். இதன் மூலம் உலகிலேயே அதிக நேரம் டிரம்ஸ் வாசித்த பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் சுமார் 24 மணி நேரம் தொடர்ச்சியாக டிரம்ஸ் வாசித்ததே உலக சாதனையாக இருந்துள்ளது. தற்போது ஷிருஷ்டி அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்தியாவில் நடந்த விசித்திரமான திருமணங்கள்..!!!


இந்தியாவில் நடந்த சில விசித்திரமான திருமணங்களின் புகைப்படங்கள் இங்கு காண்பிக்கப்பட்டுள்ளது..!!

இந்தியாவில் ஐதீகம், ஜாதி, மதம், என்ற பல போர்வையில் பலவித ஆங்காங்கே பல விசித்திரமான திருமணங்கள் நடந்திருக்கின்றன.

 இன்றளவும் கூட இந்தியாவின் மூலைமுடுக்கில் ஆங்காங்கே சில பகுதிகளில் நாய்களுக்கும், தவளைகளுக்கும் திருமணம் செய்து வைக்கும் ஐதீகம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இதோ, அவற்றில் இணையங்களில் அதிகம் காணப்படும் சில விசித்திரமான திருமணங்களின் புகைப்படங்கள்...




#தவளை திருமணம்!

தவளை திருமணம் அடிக்கடி செய்திகளில் படித்திருப்போம். இது, தவளை தம்பதிகளின் திருமண புகைப்படம். ஒரே கஷ்டமப்பா!

#நாய் திருமணம்!

ஊருல பசங்க கல்யாணம் பண்ண பொண்ணு இல்லாம அல்லாடிட்டு இருக்காங்க. இவங்க நாய்க்கு பொண்ணு கூட கல்யாணம் பண்ணி வெச்சுட்டு இருக்காங்க. மழை பெய்யுமாம்! நாயுடன் திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இந்த நாய் திருமணம்!

#மாடுகளுக்கு திருமணம்!


 இந்தியாவின் பல பகுதிகளில் மாடுகளுக்கு திருமணம் செய்து வைத்தால் நல்லது என்ற ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 ஓல்ட் இஸ் கோல்ட்!  இது உனக்கே நல்லா இருக்கா... வசனம் யாருக்கெல்லாம் ஞாபகம் வருகிறது? இதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும்!


இந்த மாதிரி கலர் சட்டை போடுறதுக்கு எல்லாம் தகுதி வேணும் என்பது போல, இப்படி ஒரு உடையில் திருமணம் செய்வதற்கெல்லாம் நிஜமாகவே தைரியம் வேண்டும்!


இப்பவே! கல்யாணம் பண்றதும், ஒருத்தன் மேல புல்டோசர் ஏத்துறதும் ஒண்ணுன்னு, கல்லூரி மாணவர்கள் கேலியாக கூறுவார்கள்.

ஆனால், கல்யாணம் ஆனவுடனேயே புல்டோசர்"ரில் ஏற்றுவது என்ன நியாயம் மக்களே.!

#குழந்தை திருமணம்!

இன்றளவும் இந்தியாவில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் குழந்தை திருமணம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இது தான் முடிவோ! ஏற்கனவே பொண்ணுங்க எண்ணிக்கை குறைவு. ஒருவேளை இப்படியே போனா, கடைசியில இப்படி தான்
பசங்க கல்யாணம் பண்ணிக்கணும் போல. கொஞ்சம் கஷ்டம் தான்!

நமது வீடுகளில் திருமண ஆல்பங்கள் எடுத்து பார்த்தாலே இப்படி ஒரு படம் கண்ணில் மாட்டும். சிரிப்பதா,


அழுவதா என தெரியாமல் ஒரு லுக் விடுவார்கள்.


தமிழர்களின் வீரத்தை உலகுக்கே பறைசாற்றிய மாவீரனை புகழ்ந்த இலங்கை ராணுவ உயர் அதிகாரி..!!

நான் மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும்.  உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; லட்சியமும் வேறு'' என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இருக்காதா பின்னே....? வீட்டின் செல்லக்குட்டியும் கடைக்குட்டியுமான அந்த இளைஞனிடம் இருந்து அப்படியொரு முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லையே!

கடந்த சில மாதங்களாகவே அவனது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். மக்கள் நலன், சுதந்திரம் என எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தான். வீடு தேடி வந்த பெரும் காவல் படையோ, ''எங்கே உங்கள் மகன்? அவன் வீட்டுக்கு வந்தால் எங்களிடம் மரியாதையாக ஒப்படைத்து விடுங்கள்'' என்று மிரட்டினர். நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களை என்னவென்று ஊகிக்க முடியாத நிலையில் இருந்த பெற்றோர் முன் அப்படியொரு தீர்க்கமான முடிவை உதிர்த்த அந்த இளைஞன்தான் பின்னாட்களில், 'தமிழீழ தேசிய தலைவர்' என உலகத்தாரால் போற்றிப் புகழப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன்! அவரது பிறந்த தினம் இன்று.

1954-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். உலகையேத் திரும்பிப் பார்க்கவைத்த மாவீரனாக பிரபாகரன் உருவெடுத்ததற்கான ஆரம்ப விதை அவரது சிறுவயது பிராயத்தில் நிகழ்ந்தது. ஒரு ராணுவ வீரன், ஒரு முதியவரை ரத்தம் பீறிட்டு வருவதையும் பொருட்படுத்தாமல் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பிரபாகரன், தன் தந்தையிடம் ''ஏன்? இப்படி துன்புறுத்துகிறார்?'' என்று கேட்டார். அவரது தந்தையோ, ''நாம் ஒன்றும் செய்ய முடியாது? நம்மிடம் ஒன்றுமே இல்லை. ஆனால், அவர்களிடமோ ராணுவ பலமும் அதிகார பலமும் இருக்கிறது'' என்றார்.

உடனே பிரபாகரன், "இதே ராணுவ பலத்தோடு இவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன்" என்றார் சட்டென்று. சொன்னதுபோலவே, இலங்கை அரசப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் எனும் ராணுவக் கட்டமைப்பை உருவாக்கி உலகத் தமிழருக்கான தமிழீழ தேசத்தைக் கட்டிக் காத்தார்.

தமிழர்களின் வீரத்தை உலகுக்கே பறைசாற்றிய அந்த மாவீரனின் வரலாற்றுத் தடங்கள் சில...

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த காலத்தில், ஒரு வேதியியல் பொறியியலாளர் பிரபாகரனைச் சந்தித்து "நீங்கள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளில் மயக்க மருந்தையும் கலந்து வெடிக்கச் செய்தால், எதிரிகள் இறப்பதோடு மட்டுமல்லாமல், தப்பித்துச் செல்ல நினைக்கும் எதிரிகளும் மயக்கம் அடைந்து விடுவார்கள். இதனால், நாம் அனைத்து எதிரிகளையும் மிக எளிதாக அழிக்கலாம்" என்று ஆலோசனை தந்தார். இதனைக் கேட்டு கடும் கோபம் கொண்ட பிரபாகரன், ''இது கோழையின் செயல். நேருக்கு நேர் நின்று எதிரிகளோடு சண்டையிடுபவர்கள்தான் விடுதலைப் புலிகள்.  இது உலகப் போர் நெறிகளுக்கு எதிரானது. யுத்த நியதிகளை புலிகள் ஒருபோதும் மீறமாட்டார்கள்'' என்று உறுதியாகப் பதிலுரைத்தார்.

கட்டுநாயக்க பன்னாட்டு விமான தளத்தோடு இணைந்தே இலங்கை விமானப் படைத் தளமும் இருந்தது. 2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதியன்று இந்த விமான தளத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த விமான தளத்துக்குப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்திறங்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரபாகரன், ''பயணிகளில் ஒருவருக்குக்கூட எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய பின்புதான் தாக்குதல் நடத்த வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்தார். அதன் பின் தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றியும் பெற்றார்

தமிழகத்தில் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம் அது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதி ரகு, பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழகத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்த்தார். ''போலீஸ் சோதனைகள் நிறைய இருந்திருக்குமே.... எப்படித் தப்பித்து வந்தாய்?'' எனக் கேட்டார் பிரபாகரன். "நம்முடைய ஆயுத வாகனத்தை ஆம்புலன்ஸ் வாகனம் போல் மாற்றி அமைத்து கொண்டு வந்தேன்" எனக் கூறினார். சட்டென கோபமடைந்த பிரபாகரன், ''ஆம்புலன்ஸ் என்பது மனிதர்களின் உயிரைக் காக்கும் வாகனம். புனிதமான அந்த வாகன சின்னத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களை ஏன் எடுத்து வந்தாய்? இதுமாதிரி செயல்களுக்கு இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்'' என்று கடுமையாக எச்சரித்தார்.

இறுதிகட்டப் போரில், பிரபாகரனோடு நேருக்கு நேர் யுத்தம் புரிந்த  இலங்கை ராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பிரபாகரனைப் பற்றிக் கூறிய வரிகள் இவை : "பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடித்தே வாழ்ந்து வந்தார். பெண்களுக்கு மரியாதையையும்,பாதுகாப்பையும் கொடுத்தவர். அவர் ஒரு இயக்கத்தின் தலைவனாக இருந்த போதும் அன்பான குடும்ப மனிதராக இருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். அவற்றில் ஒரு புகைப்படத்தில் கூட, மதுக் கோப்பையுடனோ அல்லது சிகரெட் பிடித்த நிலையிலோ பிரபாகரன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லை. அவர் ஒரு ஒழுக்கமானத் தலைவராக இருந்தார். அனைவரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தன." என்றார்.

90 வயதான க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது..!!

90 வயதான க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

 இதை ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரௌல் காஸ்ட்ரோவும் அறிவித்துள்ளார். க்யூபாவில் ராணுவ ஆட்சியாளரான பாடிஸ்டாவிடம் இருந்து ஆட்சியைப் பறித்து மீண்டும் மக்களுக்கே கொடுத்தவர் காஸ்ட்ரோ. கம்யூனிச புரட்சியாளரான காஸ்ட்ரோ, 1959ல் இருந்து 2008 வரை க்யூபாவின் அதிபராக இருந்தார். சேகுவேராவின் நண்பராகவும், சக போராளியாகவும் இருந்தவர் காஸ்ட்ரோ.

பிடல் காஸ்ட்ரோ வரலாறு

காஸ்ட்ரோவின் இயற்பெயர் பிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரூஸ்

1926ல் கியூபாவின் ஹொல்கூன் மாகாணத்தில் பிறந்தவர் காஸ்ட்ரோ

கியூபாவில் புரட்சியின் போது சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து போராடினர்

ராணுவ  ஆட்சியாளர் பாடிஸ்டாவுக்கு எதிராக போராடி ஆட்சியை பிடித்தவர் பிடல்

1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ

1976 முதல் 2008 வரை அதிபராக பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ

பிடல் காஸ்ட்ரோ -கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின் ஆகியோர் வரிசையில் உச்சரிக்கப்படும் பெயர் பிடல் கேஸ்ட்ரோ இவருடையது. வக்கீலாகத் தன் தொழிலில் ஈடுபட்ட கரும்புப்பண்ணை பணக்கார விவசாயியின் பையன் முதலாளித்துவத்தை எதிர்க்கிற ஆளாக நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் அவர் நாட்டின் சூழல். ஒரு பக்கம் மக்கள் துன்பத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தார்கள். வறுமை மக்களை வாட்டிகொண்டு இருக்க,அடிப்படை வசதிகள் இல்லாமல் நாடே துன்பப்பட்டுக்கொண்டு இருந்த பொழுது அமெரிக்காவின் பெருநிருவனங்களைக் காக்கும் பணியைத் தான் செவ்வனே க்யூபாவின் ஆட்சியாளர்கள் செய்தார்கள். மாடு திருடி பிழைத்தவர் எல்லாம் தலைவன் ஆகி நாட்டைக் காலி பண்ணி கொண்டு இருந்தார்கள்.

காஸ்ட்ரோ எக்கச்சக்க நிலங்கள் கொண்டிருந்தவரின் மகன். பாடிஸ்டா எனும் ஆட்சியாளன் (அமெரிக்காவின் கைப்பாவை )தேர்தல் நடத்துவதாகச் சொல்லிவிட்டு தேர்தலை நடத்தாமல் போக அதில் போட்டியிட்ட காஸ்ட்ரோ அதிர்ந்து போனார் ;அவனுக்கு எதிராக ஒரு புரட்சி நடத்தி அதில் பலபேரை இழந்த பின் நீதிமன்றத்தில் அவரை நிறுத்திய பொழுது வரலாறு என்னை விடுதலை செய்யும் என அவர் ஆற்றிய உரை சிலிர்க்க வைப்பது -வெகு சீக்கிரமே அரசாங்கம் அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் விடுதலை செய்தது -சே குவேராவுடன் சேர்ந்து பன்னிரண்டு தோழர்களுடன் உதவியோடு கொரில்லா போரை ஆரம்பித்து ஆட்சியை எளிய மக்களின் துணையோடு பிடித்துக் காண்பித்தார்.

அவர் ஆட்சியை ஒழிக்க அமெரிக்க எடுத்த முயற்சிகள் ஏராளம் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள் என்கிற ஆவணப்படமே வந்தது .

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைக் கச்சா எண்ணெயை ரஷ்ய நிறுவனங்களிடம் வாங்க சொன்னார் .அவர்கள் நோ சொன்னார்கள் .தேசிய மயமாக்கினார் .அடிமாட்டு விலைக்குக் கரும்பு விளைவிக்கும் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கிய யூனைடட் ப்ரூட் கம்பெனிக்கு அதே விலைக்கு இழப்பீடு கொடுத்து டாட்டா காண்பித்து அனுப்பினார் .அமெரிக்கா என்னடா இது எனச் சுதாரிப்பதற்குள் இப்படி நடந்ததும் சர்க்கரையை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்றது . இதற்குதான் காத்திருந்தேன் என அமெரிக்காவின் வங்கிகள்,நூற்றி அறுபத்தி ஆறு கம்பெனிகள் என எல்லாவற்றையும் தேசிய மயமாக்கினார் கேஸ்ட்ரோ . ரஷ்யா கைகொடுத்தது.நடுவில் ஒரு ஆயிரத்து நானூறுபேரை அமெரிக்கா இவரின் ஆட்சியை ஒழிக்க அனுப்பி முகத்தில் கரிப்பூசிகொண்டது.

காலி என அமெரிக்கா நினைத்த,காலியாக்க நினைத்த காஸ்ட்ரோ மற்றும் க்யூபா பல்வேறு பொருளாதாரத் தடைகள்,சதிகள் யாவற்றையும் மீறி வளர்ச்சிப்பாதையில் நடை போடவே செய்தது . மக்கள் ஓயாமல் உழைத்தார்கள். உலகில் மிகச்சிறந்த பொதுமருத்துவ வசதிகள் மக்களுக்குக் கிடைக்கும் நாடுகளில் க்யூபா முதன்மையானது. குழந்தைகள் நலம்,கல்வி ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்படும் பணம் மொத்த வருமானத்தில் அதிகமே. மனித வள குறியீட்டில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் அந்நாடு சிரிக்கிறது. க்யூபா அமெரிக்காவின் காலின் கீழ் உள்ள முள் போல உலக வரைபடத்தில் இருக்கும். அது காலில் தைத்த முள் இல்லை;கண்ணில் தைத்த முள். அந்த நம்பிக்கை தேசத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ.

பூமியை விட்டு வேறு கிரகத்துக்கு செல்கிறது அமெரிக்கா!! அதிசயம் ஆனால் உண்மை..!!



உலகின் பலமிக்க நாடுகளுக்கு இடையில் விண்வெளியை வெல்வது தொடர்பாக கடும் போட்டி நிலவி வருகிறது.

ரஷ்யா தான் முதலில் விண்வெளியில் தடம்பதித்தது என்பதும், அமெரிக்கா முதலில் நிலவில் கால்பதித்தது என்பதும் ரகசியமான விஷயமல்ல.

ஆனால், தமது நாட்டில் வாழும் மக்களை உலகை விட்டு வேறு கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஒரு நாடு ஈடுபட்டுள்ளது என்ற ரகசியத்தை சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

நம்புவது கடினம் தான், ஆனால் இது உண்மை, அது வேறு எந்த நாடும் அல்ல, அமெரிக்கா தான்.

வாஷிங்டனில் அண்மையில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் போது உரையாற்றிய பென்டகன் என்றழைக்கப்படும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகத்தின் விண்வெளி தொடர்பான உதவி செயலாளர் Winston Beauchap அமெரிக்க மக்களை பூமிக்கு வெளியில் வேறு கிரகத்திற்கு கொண்டு செல்ல அமெரிக்க திட்டமிட்டு வருவதாக கூறினார்.

உலகில் தற்போது காணப்படும் சுழ்நிலையால் பூமியை விட்டு வேறு ஒரு இடத்தை தேர்வு செய்ய அமெரிக்க தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலை மற்றும் ஒழுக்கமற்ற அரசியல் முறை தொடர்பாக அமெரிக்கா கவலையில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை பூமியை சுற்றி பயணித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான செயற்கைகோள்களின் உடைந்து போன பாகங்கள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது. இந்த விண்வெளியில் பயணிக்கும் விண் பொருட்கள் பூமிக்கு அழிவை ஏற்படுத்தக் கூடும் என தெரியவந்துள்ளது.

எப்படி இருந்தாலும் பூமியை சுற்றியுள்ள செயற்கை கோள்களின் உடைந்த பாகங்கள் காரணமாக மனிதன் வேறு உலகத்தை தேடும் முயற்சிக்கு தடை ஏற்படும் என தெரியவந்துள்ளது.

மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட உதவி செயலாளர் Winston Beauchap, செயற்கைகோள்களை கணக்கிடுவதில் பல தவறுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.

உண்மையான தகவல்களின் அடிப்படையில் பூமிக்கு அருகில் மனிதன் வாழக் கூடிய பல இடங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூமியில் தற்போது காணப்படும் சூழ்நிலையில் எந்த நாடாவது அமெரிக்காவின் செயற்கைக்கோளை தாக்கி அழித்தால், அமெரிக்கா செயலிழந்து மிக பெரிய அழிவு ஏற்படும் எனவும் Winston Beauchap தெரிவித்தார்.

நிலவில் மனிதர்கள் விட்டு வந்த 9 விசித்திரமான பொருட்கள்!

குழந்தையை வைத்து இவர் செய்யும் சாகசம் பாருங்கள் !!


50 ,லட்சம் பூக்களால் உருவாக்கப்பட்ட மலர் விமானம். அசத்தலான வீடியோ!!



துபாயில் உள்ள பிரபல பூங்காவில் அந்நாட்டை சேர்ந்த ‘மிராக்கில் கார்டன்’ நிறுவனத்துடன் இணைந்து ‘எமிரேட்ஸ்’ ஏர்பஸ் விமானத்தின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

72.93 மீட்டர் நீளம், 10.82 மீட்டர் உயரத்துடன், 24.21 மீட்டர் உயர இறக்கையுடன் சுமார் 30 டன் இரும்பு மற்றும் பலகைகளை கொண்டு 200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒருநாளைக்கு பத்து மணிநேரம் வீதம், 180 நாள் உழைப்பில் அச்சு அசலாக ஏர்பஸ் A380 விமானத்தின் அதே அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் மேல்பாகம் முழுவதும் கண்ணைக்கவரும் ஏழுவகைகளை கொண்ட வண்ணமயமான செடி, கொடிகள் பதிக்கப்பட்டு, அதில் பூத்துக் குலுங்கும் சுமார் 50 லட்சம் மலர்கள் கண்கொள்ளா காட்சியாக தோன்றுகிறது.

இதற்கு தேவையான பூச்செடிகள் எல்லாம்  ‘மிராக்கில் கார்டன்’ நிறுவனத்தின் பண்ணையில் பதியமிட்டு இந்த அலங்கார விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள  50 லட்சம் மலர்களும் ஒருசேர பூத்து குலுங்கும் வேளையில் இவற்றின் எடை சுமார் 100 டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (27-ம் தேதி) இந்த மலர் விமானம் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் இதுதொடர்பான செய்திகளை அறிந்த துபாய் மக்கள் இப்போதே இதன் அழகில் மனங்களை பறிகொடுக்க தொடங்கியுள்ளனர்.

#தேர்போகி விஜய்.

விவசாயி மகன் ’ஏர் ஹிமாலயாஸ்’ விமான சேவையை தொடங்கி உயர்ந்த ஊக்கமிகு வளர்ச்சிக்கதை..!!

ஹிமாச்சல் பிரதேசத்தில் அழகிய மலைகுன்றுகளுக்கு நடுவில் உள்ள குல்லு மாவட்ட கிரமமான காக்னல் எனும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர் புத்தி ப்ரகாஷ் தாகுர்.

 அவரது அப்பா ஒரு விவசாயி. அங்குள்ள நிலத்தில் விவசாயம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். புத்தி ப்ரகாஷ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்துக்கொண்டே, விவசாயம் செய்து தன் குடும்பத்துக்கும் உதவிவந்தார். அதை நினைவு கூறுகையில்,

”எங்கள் மாடுகளை மேய்க்க வயலுக்கு கூட்டிச்செல்வேன், நிலத்தை உழுவேன், நாத்து நடுவேன் மற்றும் களைகள் எடுப்பேன். என் அப்பாவுக்கு உதவியாக அவரது அரிசி வயலில் வேலை செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும்,” என்றார்.
பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், சண்டிகருக்கு மேற்படிப்பிற்காக சென்றார் புத்தி. அங்கே டிஏவி பள்ளியில் படிப்பை தொடர்ந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் கிராமத்துக்கு சென்று தன் தந்தைக்கு உதவுவதை நிறுத்தவில்லை அவர். தனது கஷ்டத்தை விட தன் அப்பாவின் கஷ்டத்தை பெரிதாக உணர்ந்தவர் புத்தி.


“என் அப்பா கடுமையான உழைப்பாளி. என் தாத்தா இறந்த போது, என் அப்பாவுக்கு மூன்று வயது தான். அவர் தினக்கூலியாக வேலை செய்தும் குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறார். அதனால் அவருக்கு வேண்டிய உதவியை செய்ய நினைப்பேன். நான் சண்டிகரில் படித்து வந்தாலும் என் கிராமத்தையும், அப்பாவையும் நினைத்துக்கொண்டே இருப்பேன்,” என்றார்.
காலம் மாறியது

தனது மகனின் உதவியோடு, புத்தி ப்ரகாஷின் தந்தை ஆப்பிள் வளர்ப்பில் ஈடுபட முடிவெடுத்தார். அந்த ஆப்பிள்களை ஏற்றுமதி செய்ய தேவையான மரப்பெட்டிகளையும் தயார் செய்ய ஆரம்பித்தார். தொழில் நன்றாக வளர்ந்தது. சண்டிகர் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த புத்தி ப்ரகாஷ், தன் தந்தையின் தொழிலில் உதவி செய்ய காக்னல் திரும்பினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் முடித்தார் அவர்.

தனது கல்வி பயிற்சியின் போது, தங்கள் மாநிலத்தின் மீது வெளிநாட்டவர்களுக்கு இருக்கும் மோகத்தை கவனித்தார் புத்தி. அதன் அடிப்படையில், தனது கிராமத்தில் ரிசார்ட் ஒன்றை கட்ட முடிவெடுத்தார். மணாலி’ யில் இருந்து 9 கிமி தூரத்தில் இருந்த இவரது கிராமம், சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்தது. ஆண்டுக்கு ஆண்டு இந்த இடத்துக்கு கூட்டம் கூடிக்கொண்டே போனது. 1996 இல் தனது ஆசைப்படி, பல ஆண்டுகளின் திட்டப்படி, முதலீட்டை எப்படியோ பெற்று, தன் கிராமத்தில் ரிசார்ட் கட்டும் பணிகளை தொடங்கினார் புத்தி ப்ரகாஷ்.

ஆனால் அதே ஆண்டு, அவர்களின் விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் ரிசார்ட் கட்டும் வேலை தடைப்பட்டது. 1999’ ஆண்டிற்குள் எப்படியோ 5 அறைகள் கொண்டு ரிசார்ட் தயார் ஆனது. சுற்றுலா பயணிகளும் இங்கே குவியத் தொடங்கினர்.

“எங்கள் ரிசார்ட் சிறியதாக இருந்தது, ஆனால் வீட்டு சூழ்நிலையை தந்தது. சில அறைகளில் சமையலறை வசதி இருந்தது, அது பயணிகளுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. அங்கே தங்களுக்கு பிடித்த உணவை சமைத்து உற்சாகமடைந்தனர். எங்கள் கிராமத்தில் இருந்து கொண்டே தங்களின் வீட்டு உணர்வை பெற்றனர்,” என்கிறார்.
2001 இல் புத்தி ப்ரகாஷ், 40 மெத்தைகள் கொண்ட ஒரு விடுதியை கட்டுவதற்கான ப்ரான்சைஸ் காண்ட்ராக்ட் ஒன்றை பெற்றார். இது இளம் பயணிகளுக்காக கட்டப்படும் விடுதி. ட்ரெக்கிங் மற்றும் மலையை ஏறி சுற்றிப்பார்க்கவரும் இளைஞர்களுக்கு குறைந்த விலையில் விடுதி இருந்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் ஹிமாலயா அடிவாரத்தில் அதை கட்ட ஆரம்பித்தார் புத்தி.

கடந்த சில ஆண்டுகளாக, புத்தியின் தொழிலில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டு, தான் கட்டிய ரிசார்டில் மேலும் அறைகளை கட்டி விரிவுப்படுத்தியுள்ளார். ‘சர்தக் ரிசார்ட்’ என்று அழைக்கப்படும் இந்த ரிசார்டில் தற்போது 55 அறைகள் உள்ளன. நாட்டில் எங்கு சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான விழா மற்றும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றால் அதில் தவறாமல் கலந்துகொள்கிறார் புத்தி ப்ரகாஷ். இதன் மூலம் காக்னல் கிராமத்தை மாநிலத்தின் சுற்றுலா மேப்பில் கொண்டுவந்துள்ளார்.

இவரின் திசை நோக்கி காற்று அடித்தது...

சர்தக் ரிசார்ட்ஸ் அமோக வெற்றி அடைந்ததை அடுத்து, புத்தி ப்ரகாஷ் தனது தொழிலை இதற்கு மேல் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்தார். ஹிமாச்சல் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தரும் துறைகளில் பணிபுரிந்த புத்தி, இதற்கு மேல் பெரிதாக எதையாவது செய்து சாதிக்க முடிவெடுத்தார்.

தனது பகுதியில் ஒரு விமான சேவையை தொடங்க முடிவெடுத்தார் புத்தி ப்ரகாஷ். அத்துறை பற்றி போதிய அறிவு இல்லாது இருந்தாலும் தனது கனவு திட்டமாக இதை செய்ய ஆயத்தமானார்.

“ஹிமாச்சல் ஒரு அழகிய மாநிலம். நான் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். ஆனால் என் அனுபவத்தில் சொல்கிறேன், ஹிமாச்சலை போல் வேறு எந்த ஊரும் அழகாய் இல்லை. ஆனால் இங்கு போக்குவரத்து வசதி குறைவு, ஒரு பெரிய குறை. இங்கே ரயில் சேவை, விமான சேவை என்று எதுவும் இல்லை. சாலை வழிப்பயணம் இன்றும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது. அதனால், மக்கள் எளிதாக இங்கு வந்து என் மாநிலத்தை அடைய, விமான சேவையை தொடங்க முடிவெடுத்தேன்,” என்றார்.
’ஏர் ஹிமாலயாஸ்’ என்ற விமான சேவையை தொடங்கினார் புத்தி ப்ரகாஷ். ஹிமாச்சல் ஹாலிடேஸ் என்ற தனது பயண நிறுவனத்தின் கீழ் இதை தொடங்கினார். ஆனால் அவரது தேவைக்கு எந்த ஒரு விமான நிறுவனமும் உதவி செய்யவோ, பார்ட்னராகவோ தயாராக இல்லை. ஆனால் புத்தி ப்ரகாஷ் சோர்ந்து போகவில்லை, தொடர்ந்து முயற்சித்து, இறுதியாக பெங்களுருவை சேர்ந்த ’டெக்கன் சார்ட்டெர்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து தன் மாநிலத்துக்கு விமான சேவையை தொடங்கலானார்.

ஏப்ரல் 2, 2014 இல் இவர்களது முதல் விமானம் பறந்தது. ஹிமாச்சல் பிரதேசத்திற்கு முதன் முறை பிசினஸ் கிளாசில் பறந்த முதல் தனியார் விமான சேவை இவர்களதே. அந்த நாள் கனவு நினைவான நாள் என்று தன் நினைவை பூரிப்புடன் பகிர்ந்தார் புத்தி.

ஆனால் கதையில் ஏற்பட்ட மாற்றம்

புத்தி ப்ரகாஷின் மகிழ்ச்சி நீடித்து இருக்கவில்லை. ஏப்ரல், ஜூலை மாதத்தில் இவர்களது “ஏர் ஹிமாலயாஸ்” சண்டிகர் முதல் குல்லு வரையான விமான சேவையில் ஒரு சில பயணிகள் மட்டும் புக் செய்தனர். 9 பேர் கொண்டு செல்லும் அந்த விமானம் பெரும்பாலும் காலியாக சென்றது.

“நாங்கள் மார்கெட்டிங் சரியாக செய்யவில்லை. ஒரு சில பயணிகளுக்கு மட்டுமே எங்கள் விமான சேவையை பற்றி தெரிந்திருந்தது,” என்றார்.
இவரது நிறுவனத்துக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. முதல் ஆண்டிலேயே ஏற்பட்ட இந்த நஷ்டத்தை கண்டு அஞ்சி அவர் இத்திட்டத்தை கைவிடவில்லை. மெல்ல இவர்களின் விமான சேவை பிரபலமாகி பயணிகள் வரத்தொடங்கினர். நஷ்டம் 25 லட்சட்திற்கு குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு நஷ்டமின்றி சென்றது மகிழ்ச்சி தகவல். மேலும் சரியான திட்டம் மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் வரும் ஆண்டில் நல்ல லாபம் ஈட்டுவோம் என்று நம்பிக்கையுடன் கூறினார் புத்தி ப்ரகாஷ்.

விரைவில், மணாலியில் இரண்டாவது ரிசார்ட் ஒன்றை தொடங்குகிறார் புத்தி. தினமும் ஏர் ஹிமாலாயாஸ் சேவையை தக்கவைத்துக்கொள்ள அதன் செலவீனங்களை சமாளிக்க போராடி வருகிறார். ”ஹிமாச்சலில் விமான சேவைக்கு நல்ல வருங்காலம் உள்ளது. ஆனால் அதற்கான காலத்துக்கும், நேரத்துக்கும் காத்திருக்கவேண்டி உள்ளது. ஒரு பெரிய சேவையை கட்டமைக்க பொறுமையாக இருக்கவேண்டும். அப்போதே அதன் பலனை அடையமுடியும்,” என்று கூறுகிறார்.

வெள்ளி, 25 நவம்பர், 2016

நெற்பயிரை புகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பாற்ற.!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதையப் பருவத்தில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால், அதிலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

#திருவள்ளூர் மாவட்டத்தில், பாண்டேஸ்வரம், ஆலத்தூர், கீழ்கொண்டையார் மற்றும் அருக்கம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நெற்பயிரை புகையான் பூச்சி தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சேத அறிகுறி:
பூச்சிகள் தூர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாகப் புகைந்தது போலக் காணப்படும்.

பொருளாதார சேத நிலை: தூருக்கு ஒரு பூச்சி, தூரில் சிலந்தி காணப்பட்டால் தூருக்கு 2 பூச்சிகள் என பொருளாதார சேதம் ஏற்படும்.

மேலாண்மை முறைகள்: நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு பத்தி நடவு செய்தல். மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்பொழுது 3-4 முறையாகப் பிரித்து இடவேண்டும். களைச் செடிகளை அகற்றி விட வேண்டும்.
புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, கோ42, பிஒய் 3 ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.

 விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கலாம்.
மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம்.

வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப்பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இப்பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படுத்துகின்றன.

 பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும்.

 குளோரன்டிரினிலிப்ரோல் 18.5 எஸ்சி-150 மிலி. இமிடாகுளோபிரிட் 17.8 எஸ் எல் - 100 மிலி, பயூப்ரோபெசின் 25 எஸ்.சி -800 மிலிடைகுளோர்வாஸ் 76 எஸ்.சி 625 மிலி அசிப்பேட் 76 எஸ்.பி. -625 கிடிரைஅசோபாஸ் -40 இசி- 625 மிலி இட வேண்டும்.

புகையானின் மறு உற்பத்தியைப் பெருக்கும் மிதைல் பாரத்தியான் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளைத் தெளிக்கக் கூடாது.

மேலும், நெல் வயலில் #பாசியைக் கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஒரு கிலோ வீதம் ஒரு ஏக்கருக்கு இடவேண்டும்.

#தேர்போகி விஜய்.

​நீரின்றி காய்ந்து கருகும் பாக்கு மரங்கள் - வெட்டி வீழ்த்தப்படும் அவலம்..!!



சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நீரின்றி காய்ந்து கருகும் பாக்கு மரங்களை, விவசாயிகள் அடியோடு வெட்டி வீழ்த்தும் அவலம் தொடர்கிறது.

தமிழகம் முழுவதும் 5400 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, சுமார் பத்தாயிரம் மெட்ரிக் டன் பாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் சேலம், கோவை மாவட்டங்களில் மட்டும் 40 சதவீதம் பாக்கு சாகுபடி செய்யப்படுகிறது.

இதில் சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரங்களில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில், பாக்கு மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், இந்த பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் நீரின்றி காய்ந்து போன பாக்கு மரங்களை விவசாயிகள் வெட்டி வீழ்த்தி வருகின்றனர். இதனையடுத்து கருகிப்போன பாக்கு மரங்களை கணக்கீட்டு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பையில் 10 மாத குழந்தையை காலால் பந்தாடிய பள்ளி பராமரிப்பாளர் - அதிர்ச்சி வீடியோ.!!



மும்பையில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் 10 மாத பெண் குழந்தையை அங்கு பணியாற்றும் பெண் ஒருவர் பந்தை தூக்கிவீசுவது போன்று வீசி கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:- கடந்த 21 ஆம் ததேதியன்று மும்பையில் உள்ள இந்த பள்ளியில் பணியாற்றும் அப்சனா என்ற குழந்தை பராமரிப்பாளர், 10 மாத குழந்தையை காலால் மிதித்தும், பந்தை வீசுவது போன்று தரையில் குழந்தையை வீசியுள்ளார்.

இதில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் தலையில் காயம் இருப்பதை கண்ட பெற்றோர் அன்று மாலை போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பள்ளியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிரா பதிவை ஆய்வு செய்த மேற்கூறப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பள்ளி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தான் திறக்கப்பட்டது என்றும் அப்சனா என்ற கடந்த மாதம் தான் பணியில் சேர்ந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

தப்பை தட்டிக்கேட்ட இராணுவ வீரரை அடித்து உதைத்த போலீஸார்.!!



உருக வைக்கும் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இராணுவ வீரர் ஒருவரை போலீஸார் நடுரோட்டில் அடித்து உதைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரீனா பகுதியில் தினேஷ் என்ற இராணுவ வீரர் தனது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸார் அவர்களுக்கு தெரிந்தவர்களை மட்டும் வரிசையில் நிற்க வைக்காமல் உள்ளே அனுப்பியுள்ளனர்.

 இதனால், கோபமடைந்த இராணுவ வீரர் தினேஷ் இதனை கண்டித்து வங்கி முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட தினேஷை போலீஸார் அடித்து உதைத்து அப்புறப்படுத்தினர்.

இது குறித்து தினேஷ் அளித்த புகார் மீதும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது, இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரியாக பணி புரியாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது!!.. மத்திய அரசு அதிரடி..!!

ஒழுங்காக பணி புரியாத மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என்றும், ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது செயல்திறன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், அந்த வாரம் முழுவதும் முடிக்கப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்த விவரங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

ஏழாவது ஊதியக் குழு கடந்த ஜூலை மாதம், மத்திய அரசு ஊழியர்களுக்கு “செயல்திறன் அடிப்படையில் சம்பளம்’ என்ற முறையை அனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இதனைதொடர்ந்து, நேற்று நாடளுமன்றத்தில் பேசிய மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரா ,” மத்திய அரசு ஊழியர்கள் ஒழுங்காக செயல்படாமல் இருந்தால் வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தப்படும்.

மேலும் ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான , “செயல்திறன் அடிப்படையில் சம்பளம்’ என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி மத்திய அரசுப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான குறியீட்டுக்கு ஏற்ப செயல்படாவிட்டால் வருடாந்திர சம்பள உயர்வு நிறுத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

பணமே கொடுக்காம டூவீலரை தள்ளிட்டு போங்க..!


தினம், தினம் நாளிதழில்களில் வரும் விளம்பரம் தான் இது..

 ரூ 101, மட்டும் கொடுத்தா போதும் காரை ஓட்டி செல்லுங்க..!

முன்பணம் இன்றி டூவீலர் எடுத்துட்டு போங்க என்ற இந்த விளம்பரத்தின் பின்னணி மோடிதாங்க..!

கருப்பு பணத்தை ஒழிக்க மோடியின் ரூ 500, 1000ம் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு தான்காரணம். நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விட்டது.

அடுத்த சில மாதங்களில் கார், டூவீர் மற்றும்  எலக்ட்ரிக் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களில் வரியும் ஒன்றுக்கு பாதியாக குறைந்து விடும்.

அதனாலதான் தங்களிடமுள்ள வாகனங்களை எப்படியும் விற்றுவிடவேண்டும் என்று வாகன நிறுவனங்கள் பணமே தராவிட்டாலும் வாகனத்தை தள்ளிட்டு போங்க என கூறுவது.

புத்திசாலி தனமாக யோசித்து சில மாதங்கள் கழித்து வாகனங்கள் வாங்கினால் பாதிவிலையில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

வியாழன், 24 நவம்பர், 2016

தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் முதல் தடவை சந்தித்த கண்கொள்ளா காட்சி.!!


ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதவாறு தலை ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் முதல் தடவையாக ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிக்காகோ நகரைச் சேர்ந்த நிகோலி மக்டொனால்ட்டுக்கு 14 மாதங்களுக்கு முன்னர் பிறந்த ஜேடன் மற்றும் அனியஸ் என்ற குறித்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி வேறு பிரிப்பதற்கான 27 மணி நேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தற்போது அந்தக் குழந்தைகள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் முதன் முதலாக பார்த்துக் கொள்ளும் அரிய வாய்ப்பை கிடைத்தவேளையினை புகைப்படம் எடுத்துள்ளனர்.

சமூகவலைத்தளங்களில்- #வைரலான புகைப்படம்..
பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#தேர்போகி விஜய்.

நிலவை பறக்கும் தட்டில் வட்டமடித்து வசமாக கேமராவில் சிக்கிய வேற்றுக்கிரகவாசிகள் - வீடியோ!

2016, பிறந்த பின்பும் வேற்றுக்கிரக வாசிகள், பூமிவாசிகளின் வார்த்தைகளில் அன்றாடம் வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்.

ஒருபக்கம் வேற்றுக்கிரகவாசிகள் இல்லை என கூறப்பட்டாலும், மர்மமான விடயங்களை மட்டும் விஞ்ஞானிகளும், மேற்குலகமும் ஏனோ வெளிப்படுத்துவது இல்லை.

ஆனாலும் அன்றாடம் வேற்றுக்கிரகம் தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுக் கொண்டு இருக்கும் போது, இன்னுமொரு புதிய ஆதாரம்  வெளிவந்துள்ளது.

கடந்த 14 ந்தேதி ஏற்பட்ட சூப்பர் மூன் சந்தர்ப்பத்தின் போது வேற்றுக்கிரகவாசிகள் நிலவை வட்டமடித்தது வசமாக கேமராவில் சிக்கியுள்ளது.

இது தொடர்பில் வெளியான காணொளியில் மர்மப்பொருள் ஒன்று நிலவை சுற்றி பயணிக்கின்றது. இது நிச்சயமான வேற்றுக் கிரக வாசிகளின் பறக்கும் தட்டு என ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் காணொளி தற்போது வேகமாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி வந்தாலும் உண்மைகளை மட்டும் ஆய்வாளர்கள் கூற மறுக்கின்றனர். மறைக்கும் உண்மைகள் இனிமேல் வெளிவரும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும் கூட.

#தேர்போகி விஜய்.

ரூ.500, ரூ.1000 தடை: பதட்டத்தில் நீங்கள் செய்யவுள்ள தவறுகளை தவிர்ப்பது எப்படி.???



பிரதமர் நரேந்திர மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாமல் செய்த உத்தரவு எல்லாரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை விட, இது கறுப்புப்பணம், கள்ளநோட்டு மற்றும் தீவிரவாததுக்கு முதலீடு ஆகியவற்றின் மீதான நேரடி தாக்குதலாக பார்க்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இந்திய மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது. எல்லாரும் வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும், தபால் நிலையங்களுக்கும் ஓடுவதை பார்க்கிறோம். ஆனால் இவ்வளவு பதட்டமும், பயமும் தேவை இல்லை. உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும். டிசம்பர் 30 ஆம் தேதி வரை உங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் பதட்டத்தில் செய்யக்கூடிய 5 தவறுகளை எப்படி தவிர்க்கமுடியும்?

1. பண வரவு-செலவு குறிப்பேட்டில் உள்ளதைவிட வங்கியில் அதிகம் செலுத்துவது: சிறு வணிகம் புரிபவர்கள் பெரும்பாலும் சரியான கணக்கு வழக்குகளை வைத்திருப்பதில்லை. அவர்களின் பண வரவு குறிப்பேட்டில் உள்ளதை விட அதிக அளவில் கையில் பணம் வைத்திருப்பார்கள். இது இந்தியாவில் பொதுவான ஒரு விஷயம். அதனால் வங்கியில் பணத்தை செலுத்தும் முன் கணக்கு வழக்கை சரிப்பார்த்து செய்யவும்.

இந்த அறிவிப்பால் சிறு வணிகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை. ஆனால் நீங்கள் கணக்கில் காட்டியுள்ள வரவைவிட அதிக வருமானத்தை வங்கியில் மாற்றினால் அதற்கான வரியை கட்ட தயாராக இருங்கள்.

தீர்வு:
நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்வதாக நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் வர்த்தகத்துக்கான கணக்கு குறிப்பேட்டில், காட்டாத வருமானத்தை முதலில் திருத்தி அமைத்து, கையில் உள்ள பணத்துக்கு கணக்கை காட்டிவிட்டு வங்கியில் செலுத்துங்கள். இதுவே தற்போது உங்களுக்கு இருக்கும் சிறந்த வழி.

2. மொத்தமாக பணத்தை செலுத்துவது: இது நீங்கள் செய்யவுள்ள மிகத் தவறான செயல் ஆகும். வீடுகளில் உள்ள பெண்கள் உட்பட பலர், பல ஆண்டுகளாக லட்சக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். சிறு வணிகர்கள், சிறு துறை வல்லுனர்கள், கடையோரக் கடைகள் வைத்திருப்போர் இதுபோன்று கையில் ரொக்கமாக வைத்திருப்பது இந்தியாவில் சகஜம். அவர்கள் வரி வரம்பின் கீழ் வருமானம் உள்ளவர்களாக இருப்பர். அதனால் சரியான கணக்கு வைக்காமலும் இருப்பர்.

தீர்வு: அவ்வாறு உள்ள பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் செலுத்துங்கள். முடிந்த வரை அந்த வருமானத்துக்கான சான்றுகளை சேகரியுங்கள். ஒரு பில் என்றாலும் பரவாயில்லை அதை காட்டுங்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் உங்கள் வர்த்தகம் பற்றி புரிந்தவர்கள் அதனால் அவை உதவியாக இருக்கும். இனியும் இதுபோன்ற சிறு வர்த்தகத்துக்கான போதிய சான்றுகளை மறக்காமல் பெற்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். தேவை எனில் வல்லுனர்களை நாடுங்கள்.

முக்கிய தகவல்

”வங்கிகள் தங்களின் சேமிப்பு கணக்கு விபரத்தை ஐடி துறைக்கு வருடாந்திர ரிப்போர்டில் முழு விவரங்களுடன் அளிக்கவேண்டும். 10 லட்சத்துக்கும் அதிகமான பண முதலீடு உள்ள ஒவ்வொரு அக்கவுண்ட் பற்றிய ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பித்தாக வேண்டும்.”
வருமான வரித்துறையும் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமான முதலீடுகள் செய்யும் நபர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க உள்ளனர்.

3. தங்கத்தில் முதலீடு: மக்கள் செய்யும் அடுத்த மிகப்பெரிய தவறு. இவ்வாறு பணத்தை தங்கம் வாங்கி கழித்துவிடலாம் என்று எண்ணினால் அது உங்களுக்கு முற்றிலும் எதிராக மாற வாய்ப்புள்ளது. ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்:

நகை வியாபாரிகள் தற்போது கலால் வரி சட்டத்தின் கீழ் வந்துள்ளனர். அதனால் சரியான வரவு மற்றும் செலவு கணக்குகளை வைத்திருப்பது அவசியமாகி உள்ளது.

எல்லாரும் நகைக்கடைகளை தேடி ஓடி தங்களிடம் உள்ள பணத்தை தங்கம் வாங்கி செலவழிக்கின்றனர். இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இது ஒரு தற்காலிகமான உயர்வு ஆனால் விரைவில் விலை குறைந்திடும். தங்கத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.

புதிய விதிகளின் படி, ஒருவர் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் வாங்கும்போதே வரி விதிப்பு செய்யபட்டுவிடும். அது உடனடியாக கணக்கில் வந்து அந்த வரிப்பணம் அரசுக்கு சென்று விடும். இதன் மூலம் நீங்கள் செய்யும் பரிவர்த்தனை அரசுக்கு தெரிய வந்துவிடும்.

முக்கிய தகவல்:

”எந்த ஒரு நபர் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்/சேவை விற்பனை செய்து அதற்கான பணத்தை பெற்றால், அந்த விற்பனையாளர் (Section 44AB வரி தணிக்கை கீழ்) அந்த பரிவர்த்தனை விவரங்களை தங்களது ஆண்டு தகவல் ரிப்போர்டில் வருமான வரித்துறைக்கு தெரிவித்திடவேண்டும்.”

4. உங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடாதீர்கள்: பதட்டத்தில் பலரும் தங்களின் வருமானம் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை, அந்தரங்களை யோசிக்காமல் வெளியில் பகிர்ந்து ஆலோசனை கேட்கத்தொடங்கியுள்ளனர். இது உங்களை மேலும் பிரச்சனையில் கொண்டு விடும். தகுந்த வல்லுனர்களை கண்டுபிடித்து அவர்களிடம் தெளிவாக விளக்கி வழியை பெறுங்கள்.

5. வரிக்கு பயந்து வருமானத்தை மறைத்தல்: இன்னமும் பலர் தங்களின் கறுப்புப்பணத்தை மறைக்க வழிகளை தேடுகின்றனர். மேலும் பல தவறான முறைகளை தேடி வருகின்றனர். இது உங்களை இன்னமும் இக்கட்டத்தில் தான் கொண்டு செல்லும். அதைவிட வருமானத்தை வெளிப்படுத்தி வரியை கட்டுங்கள். அரசின் அடுத்தடுத்து வரும் முடிவுகள் உங்களை எப்படியும் மாட்டிவிடும் வாய்ப்புள்ளது. இன்றோ, நாளையோ உங்களிடம் உள்ள கணக்கு காட்டாத வருமானம் அரசுக்கு தெரிந்து, கடும் தண்டனையில் கொண்டு சென்றுவிடும்.

சில மாதங்களுக்கு முன்பே அரசு, வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை அளித்தது. அப்போது அதை ஏற்காதோர் தற்போது நெறுக்கநிலையை சந்திக்கின்றனர். அதேபோல் இப்போது இதை செய்யாவிடில் வருங்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் வரும் என்று எண்ணிப் பாருங்கள். வரியை கட்டிவிட்டு நிம்மதியாக வாழ்வை கழியுங்கள்.

#தேர்போகி விஜய்

பணத்தை மாற்றி புரட்சி செய்கிறேன் என தட்டுத்தடுமாறி சரிவை கண்ட நாடுகள்..!!

இந்தியாவை போல பணத்தை மாற்றி புரட்சி செய்ய முயற்சித்த நாடுகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

பல வருடங்களாக தண்ணீர் இல்லாமல் குடங்களை தூக்கிக் கொண்டு அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருந்த மக்கள். கடந்த சில வாரங்களாக பணம் இல்லாமல் கார்டுகளையும், அத்தாட்சிகளையும் எடுத்துக் கொண்டு பணத்திற்காக வங்கிகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

 மோடி கொண்டுவந்த இந்த முடிவு பல மேல்தட்டு, நடுத்தர மக்கள் ஆதரவளித்தாலும். இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ஏழை எளிய மக்கள் தான்.

 அன்றாட செலவிற்கே பல இடங்களில் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால், இது நமது உலகுக்கு புதியதல்ல. ஏற்கனவே பல நாடுகள் இப்படி ஒரு முடிவை எடுத்து பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளனர்...

#நைஜீரியா! முகமது புகாரி ஆட்சியின் போது கடந்த 1984-ல் பழைய நோட்டுகளை தடை செய்தது நைஜீரிய அரசு. ஆனால், நைஜீரிய அரசின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் உண்டானது.

#கானா! 1982-ல் கானா கருப்பு சந்தையை வெளுக்க மாற்றத்தை கொண்டுவந்தது. ஆனால், இதனால் இந்நாட்டின் பொருளாதாரம் தான் அடி வாங்கியது.

#பாகிஸ்தான்! வருகிற டிசம்பர் மாதம் பாகிஸ்த்தான் பழைய நோட்டுகளை மாற்றி, புதிய டிசைனில் நோட்டுகளை வெளியிடவுள்ளது. இதற்காக ஒன்றரை வருடத்திற்கு முன்னரே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. பொதுமக்களும் பணத்தை மாற்றிக் கொள்ள முடிந்தது.

# வடக்கொரியா! 2010-ல் வடக்கொரியா பணத்தை மாற்றிய போது மக்கள் சாப்பிட உணவு இல்லாமல் அல்லாடிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு சந்தையை ஒழிக்க தான் கிம்-ஜாங் இம்முடிவை எடுத்தார்.

#சோவியத் யூனியன்! கருப்பு சந்தையை ஒழிக்க மிகைல் கோர்பச்சேவ் பெரிய மதிப்பிலான பணத்தை திரும்ப பெற உத்தரவிட்டார். ஆனால், இந்த முடிவை ஆதரிக்காத மக்கள், ஆட்சியை கவிழ்த்து. சோவியத் பிரிவு உண்டாக்கினர்.

 #ஆஸ்திரேலியா! பிளாஸ்டிக்கில் பணத்தை உண்டாக்கிய முதல் நாடு ஆஸ்திரேலியா. காகிதத்தில் இருந்து பிளாஸ்டிக்காக மட்டும் தான் மாற்றம் இருந்ததே தவிர, வேறு எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

 #மியான்மர்! 1987-ல் மியான்மர் கருப்பு சந்தையை ஒழிக்க, 80% பணத்தை செல்லாமல் போக செய்தது. இதனால் ஏற்பட்ட பெரியளவிலான போராட்டங்களால் பல மக்கள் உயிரிழந்தனர்.

#தேர்போகி விஜய்.

தண்ணீருக்கு அடியில் செயல்படும் நீர்மூழ்கி ரோபோ- ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களின் வடிவமைப்பு..!!!


இந்தியாவின் அழிவில்லாச் சோதனைக்கான திறன்கொண்ட, நீரின் கீழ் செயல்படும் ரோபோக்கள் தயாரிக்கும் ’பிளானிஸ் டெக்னாலஜீஸ்’, உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கியுள்ள தங்களது இரண்டாவது ரோபோ ‘பெலுகா’ வை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 நீர்மட்டத்திற்கு கீழ் 200 மீட்டர் ஆழம் வரை, 4 நாட்கள் (knot) வேகத்தில் பயணித்து கீழே செல்லக்கூடிய சக்திவாய்ந்த வாகன ரோபோ இதுவாகும்.

’ROV பெலுகா’ என்ற தொலைதூரத்தில் இருந்து இயக்கக்கூடிய இந்தவகை ரோபோ, இதற்குமுன்பு இந்நிறுவனம் வெளியிட்ட ரோபோக்களைவிட இரண்டு மடங்கு அதிக திறன்கொண்டது ஆகும். இது, மேம்படுத்தப்பட்ட பார்வைத்திறன் மற்றும் ஒலிமயமாக்கல் அமைப்புமுறையைக் கொண்டிருக்கிறது. 

Dr.பிரபு ராஜகோபால், கிருஷ்ணன் பாலசுப்ரமணியன், தனுஜ் ஜுன்ஜுன்வாலா, ராகேஷ் மற்றும் வினீத், பெலுகா ரோபோ உடன்
நேரடி ஆய்வுக்காக மட்டுமல்லாமல், 

அல்ட்ராசோனிக் தடிமன் அளவீடுகளை செய்யும் திறனையும், உயிர் சிதலங்களை சுத்தமாக்கலில் கண்டறியும் திறனையும் மற்றும் கடலில்  நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புகள் மற்றும் நீரில் மூழ்கியுள்ள பிற கட்டமைப்புக்களுக்காக கேத்தோடிக் சாத்தியத்திறன் அளவீடுகளை மேற்கொள்ளும் திறனுள்ளதாக ROV பெலுகா அமைக்கப்பட்டுள்ளது.

 இதைத்தவிர கடல்படுகை மேப்பிங்கிற்கான ஆய்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் சம்மந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த ரோபோ உதவியாக இருக்கும். பல்வகை திறன்களை இது கொண்டிருந்தாலும், குறைந்த எடையுடன், சிறிய வடிவில் எங்கும் செல்லக்கூடிய அமைப்பில், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 8 சென்சார்கள் வரை இதில் பொருத்தமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறைந்த விலையில் வடிவமைக்கப்பட்டுள்ள பெலுகா ரோபோ, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக துறைகளுக்கு ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்கும். இது 2017 ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று பிளானிஸ் டெக்னாலஜீஸ் அறிவித்துள்ளது. 

பிளானிஸ் டெக்னாலஜீஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஒ தனுஜ் ஜுன்ஜுன்வாலா இது பற்றி பேசுகையில்,

“இந்தியாவிலும், அண்டை நாடுகளில் நீருக்கு கீழ் செய்யப்படும் ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளின் வழக்கமான முறையை மாற்றி மேம்படுத்த பிளானிஸ் முற்படுகிறது. ROV பெலுகா எங்களது உழைப்பையும், செயல்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் விளங்குகிறது. இந்த ரோபோ எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் துறைக்களுக்காக குறிப்பிட்டு  வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு திறம்வாய்ந்த கண்டுபிடிப்பு.

 எங்கள் தயாரிப்பில் மைல்கல்லாக இது இருந்தாலும், இதே போன்ற பல தயாரிப்புகளை எங்கள் நிறுவனம் உருவாக்கிவருகின்றது ,” என்றார். 

ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் மையத்தில் பிளானிஸ் டெக்னாலஜீஸ் இந்த ROV பெலுகா’வை அறிமுகப்படுத்தியது.

 அழிவில்லா மதிப்பீட்டிற்கான மையத்தின் தலைவரும், பிளானிஸ் டெகனாலஜீசின் இணை நிறுவனருமான பேராசிரியர் கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் இது பற்றி கூறுகையில், 

”கடல் சார்ந்த ரோபோடிக்ஸ், அழிவில்லா ஆய்வு பரிசோதனை மற்றும் அதில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி செயல்படும் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளது. அதனால் பிளானிஸ் நிறுவனத்துக்கு சிறந்த ஒரு இடமும் வளர்ச்சி அடைய நிறைய வாய்ப்புகளும் இருக்கிறது,” என்றார். 

பிளானிஸ் டெக்னாலஜீஸ் பின்னணி

குறைவான ஆழம் கொண்ட நீரின் அடியில் இயங்கும் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆய்வுகளின் பிரிவில் இந்திய சந்தைக்கு உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும், அதி நவீன புத்தாக்கங்களையும் வெளி கொண்டுவரும் நிறுவனம் பிளானிஸ். சென்னை ஐஐடி மெட்ராஸ்’ இன் ஆராய்ச்சி பூங்காவில் அமைந்துள்ள இன்குபேஷன் மையத்தில், சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் குழுவால் இந்நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. 

கடல் போக்குவரத்துத் துறையின் ஆதரவோடு மும்பையில் ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற, ‘மேரிடைம் இந்தியா உச்சிமாநாட்டில்’ இடம்பெற்ற ஸ்டார்ட் அப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து பிளானிஸ் டெக்னாலஜீஸ் வெற்றிப்பெற்றது.

 அதேபோல், ஜப்பானின் டகிடா பவுண்டேஷன் இந்த ஆண்டிற்கான, ‘Entrepreneur Award of Takeda Young Entrepreneurship Award’ விருதிற்கு பிளானிஸ் தேர்வானது குறிப்பிடத்தக்கது. 

#தேர்போகி விஜய்