வெள்ளி, 25 நவம்பர், 2016

சரியாக பணி புரியாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது!!.. மத்திய அரசு அதிரடி..!!

ஒழுங்காக பணி புரியாத மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என்றும், ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது செயல்திறன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், அந்த வாரம் முழுவதும் முடிக்கப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்த விவரங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

ஏழாவது ஊதியக் குழு கடந்த ஜூலை மாதம், மத்திய அரசு ஊழியர்களுக்கு “செயல்திறன் அடிப்படையில் சம்பளம்’ என்ற முறையை அனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இதனைதொடர்ந்து, நேற்று நாடளுமன்றத்தில் பேசிய மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரா ,” மத்திய அரசு ஊழியர்கள் ஒழுங்காக செயல்படாமல் இருந்தால் வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தப்படும்.

மேலும் ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான , “செயல்திறன் அடிப்படையில் சம்பளம்’ என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி மத்திய அரசுப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான குறியீட்டுக்கு ஏற்ப செயல்படாவிட்டால் வருடாந்திர சம்பள உயர்வு நிறுத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக