திங்கள், 21 நவம்பர், 2016

181" நாடுகளில் கால் பதித்து உலகம் சுற்றி வந்து சாதனை படைத்த முதல் பெண்!!

நாம் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாலே  'உஸ்... அப்பாடி...'  என்று டயர்டு ஆகிவிடுவோம். ஆனால் ஒரு பெண் நான் ஸ்டாப்பாக உலகத்தையே சுற்றி வருகிறார்.

 இதன் மூலம் 'உலகம் சுற்றி வந்த முதல் பெண்' என்ற சாதனையையும் படைக்கவிருக்கிறார்.

 அதுமட்டுமல்ல, 'குறைந்த நாட்களில் உலகின் பல நாடுகளைச் சுற்றிவந்த முதல் பெண்', 'குறைந்த வயதில் உலகைச் சுற்றி வந்த சாதனைப் பெண்' என்ற சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.

 அவர்... அமெரிக்காவின் கனெக்டிகட் நகரத்தைச் சேர்ந்த 27 வயது கசண்டிரா டி பேகோல்.

ஜூலை 2015-ல் தன் பயணத்தைத் தொடங்கிய கசண்டிரா, உலகில் மொத்தமுள்ள 196 நாடுகளில் இதுவரை 181 நடுகளுக்குச் சென்றுவந்துள்ளார்.  மீதமுள்ள  15 நாடுகளை இன்னும் 40 நாட்களுக்குள்  சுற்றிவந்துவிடவேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார்.

'Expedition 196' என்ற பெயரில் உலகப் பயணத்தை தொடங்கினார் கசண்டிரா.

 இவரின் பயணச் செலவுகளை  International Institute for Peace through Tourism (IIPT) என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

 இதுவரை கசண்டிராவின் உலகப் பயணத்துக்கு  ஆன செலவு சுமார் 2 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பு சுமார் 1.35 கோடி). இதற்காக மற்ற நிறுவனங்களிடமிருந்தும் ஸ்பான்சர்கள் கிடைத்துள்ளன.

கசண்டிரா செல்லும் ஒவ்வொரு நாட்டிலும் இரண்டு அல்லது ஐந்து நாட்கள் தங்கி, அந்தந்த நாடுகளின் சுற்றுச்சூழல், கலாச்சாரம், இயற்கை வாழிடங்கள், கல்வி, தங்கும் இடங்கள்  என்று தனது இன்ட்ராகிராமில் புரமோட் செய்துவருகிறார். 15 மாதங்களில் இவர் ஏறி, இறங்கியிருக்கும் விமானங்களின் எண்ணிக்கை... 254!

உலக சாதனை படைக்கவிருக்கும் கசண்டிராவுக்கு வாழ்த்துகள்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக