ஞாயிறு, 20 நவம்பர், 2016

செல்ஃபி பிரியர்களே..! இனி நீங்கள் பறந்து பறந்து செல்ஃபி எடுக்கலாம்!!

செல்ஃபி பிரியர்களுக்காக  இத்தாலியை சேர்ந்த நிறுவனம் ஒன்று புதிய கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

#ஏர் செல்ஃபி என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த கருவி   காற்றில் பறந்தபடியே செல்ஃபி  எடுக்குமாம். மேலும் இதை எடுத்து செல்வதும் எளிது. மொபைல் போன் அளவிலேயே இருக்கும் ஏர் செல்ஃபியுடன் ஒரு மொபைல் கவரும் இருக்கிறது.

இந்த ஏர் செல்ஃபியில் அந்தரத்தில் பறந்தபடியே செல்ஃபி எடுக்கும். அதற்கான 5MP HD கேமராவும் அதனுடன் பொருத்தப்பட்டிருக்கிறது. நான்கு சிறு மோட்டார்கள் மூலம் இது பறக்கிறது. மொபைல் போனில் இதற்கான பிரத்யேக அப்ளிகேஷனை நிறுவி இதனை இயக்க முடியும் என்று கூறப்படுகிறது.

முகநூல் குழுவில் இனைய..
https://www.facebook.com/groups/371394939861118/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக