செவ்வாய், 22 நவம்பர், 2016

இதுதான் உலகின் மிகப்பெரிய இந்து கோவில் டிசைன்..!!




கிருஷ்ணர் பிறந்த இடமான பிருந்தாவனில் உலகின் மிகப்பெரிய கிருஷ்ணர் கோவில் ஒன்றை கட்ட இஸ்கான் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக மொத்தம் 30 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 70 மாடிகள் கொண்ட இந்த கோவிலை கட்ட ரூ.300 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த கோவிலை கட்ட தேவையான பணத்தை இஸ்கான் உலகம் முழுவதிலும் உள்ள கிருஷ்ணர் பக்தர்களீடம் இருந்து வசூல் செய்து வருவதாகவும் மிக விரைவில் இந்த கோவில் கட்டும் பணி ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத சம்பந்தப்பட்ட ஆலயங்களில் தற்போது வாடிகானில் உள்ள சர்ச்தான் உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத்தலமாக உள்ளது. மிக விரைவில் இந்த பெருமையை கிருஷ்ணர் கோவில் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#தேர்போகி விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக