உலகின் மிக குட்டியான தம்பதி என்ற பெருமையை பெற்ற Paulo Gabriel மற்றும் Katyucia Hoshino கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் .
பிரேசிலில் திருமணம் செய்து கொண்ட இருவரும் இன்று முதன்முறையாக மக்கள் முன் தோன்றினர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இன்டர்நெட் வாயிலாக சந்தித்த இவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் பிடித்துப் போகவே திருமணம் செய்து கொண்டதாக கூறினர்.
இந்த நிலையில் இன்று லண்டனில் இருவரது உயரமும் அளக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர். இவர்கள் இருவரின் உயரமும் சேர்த்து 70 இன்ச் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக