ஈழத் தாயின் கருவறைகள் !
இலட்சியத்தீ கருக்கொள்ளும் நெருப்பறைகள்!
நாம் உங்களை புதைக்கவில்லை...
எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்!
விழ விழ எழுவோம்!
வெட்ட வெட்டத் தழைப்போம்!
உங்கள் தியாகங்களை இலட்சியமாய்ச் சுமப்போம்...!
எம் தேசத்தின் விடியலுக்காய்... இறுதிவரை உழைப்போம்...!!
மாவீரர்களே...
நாம் உங்களைப் புதைக்கவில்லை...!
எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்.
"உண்மையான தியாகங்கள் என்றைக்கும் வீண்போவதில்லை"
பட்டமரங்களெல்லாம் ஒருநாள் துளிர்விடும்... !
கார்த்திகைப் பூக்கள் ஊரெல்லாம் மலரும்...!
#தேர்போகி விஜய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக