சர்வதேச குழந்தைகள் தினம் உலக முழுவதும் கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு ‘கிட்ஸ் ரைட்ஸ்’ என்ற சர்வதேச குழந்தைகள் உரிமை அமைப்பின் சார்பில் இந்த விருது வழங்கி கவுரவிக்கிறது.
இந்த விருதுக்கு உலக நாடுகளிலிருந்து விண்ணப்பித்த 120 பேரிலிருந்து 3 பேர் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் துபாயில் வசிக்கும் 16 வயது இந்திய சிறுமியான கேஹாசன் பாசு ஆவார். இவர் தனது 8 வயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளார். துபாயில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
இதேபோல், தீவிரவாதத்துக்கு எதிரான பிரசாரம் மேற்கொண்ட கேமரூன் நாட்டைச் சேர்ந்த திவினா, சிரியாவைச் சேர்ந்த முசூன் அல்மெல்லான் ஆகிய 2 பேரும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முகமது யூனஸ், அடுத்த மாதம் 2ம் தேதி அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.
#தேர்போகி விஜய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக