முதுமையில்ஆண் பெண் என இருபாலாருக்கும் தாக உணர்ச்சி குறையும் அல்லது குறைவாக இருக்கும். ஆகையால் தண்ணீர் அருந்துவது குறைந்து உடல் பலவீனம் அடையலாம். நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 1.5 லீற்றர் முதல் 2 லீற்றர் வரை தண்ணீர் அருந்துவது அவசியம். ஆனால் அதே தருணத்தில் இதய நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே நீர் குடிக்கவேண்டும்.
அதேபோல் முதுமையில் உள்ளவர்களுக்கு தினமும் 5 மணித்தியாலம் முதல் 7 மணித்தியாலம் வரை தூக்கமும் அவசியம். ஏனெனில் நாம் ஆழ்ந்து தூங்கும் போது தான் மூளையில் உள்ள செல்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாம் விழித்திருக்கும் போதான செயல்திறனை மேம்படுத்துகின்றன. அத்துடன் இதன் விளைவாகவே நினைவுத்திறன் மற்றும் ஆரோக்கியமான மன நலம் ஆகியவை அமைகின்றன.
ஆனால்இன்றைய இளையத்தலைமுறையினர் இரவு வெகு நேரம் வரை விழித்திருந்து, காலையில் வெகு நேரம் கழித்து எழுகின்றனர். இதனால்பகலில் மந்தமாக செயல்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தொடர்ந்து ஆழ்ந்த தூக்கம் இல்லாத நிலை ஏற்பட்டால், உடல் நலம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அத்துடன் இயல்பான வயதிற்கு முன்னரே மறதி நோய் தாக்கத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். அனைவர் மீதும் எரிச்சல்,தன்னை யாரும் கவனிப்பதில்லை என்ற மன உளைச்சல், தனிமையில் தவிக்கிறோம் என்ற மன பிரமை போன்ற மன நலம் சார்ந்த குறைபாடுகளும் தோன்றக்கூடும். அதனால் முதுமையில் ஆழ்ந்த தூக்கமும், அளவாக தண்ணீ ர் அருந்துவதும் அவசியம். இதனை முறைப்படுத்திக் கொண்டால் முதுமை இனிமையானதாக இருக்கும்.
#தேர்போகி விஜய்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக