புதன், 23 நவம்பர், 2016

இயற்கையின் அதிசய #ரத்த நீர்வீழ்ச்சி… எங்கு இருக்கிறது தெரியுமா..??

இயற்கை நம்மை ஆச்சரியப்பட வைப்பதை என்றுமே நிறுத்துவதில்லை. உலகின் ஒவ்வொரு மூளைமுடுக்கிலும் ஏதோ ஒரு விச்சித்திரமான, விவரிக்க முடியாத நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இயற்கை அன்னை, நமக்கு புரியாத பல அதிசயங்களை நிகழ்த்தி கொண்டே தான் இருக்கிறாள். அது எவ்வாறு நிகழ்கிறது என்பது இன்னும் புதிராகவே உள்ளது.

இந்த அதிசயங்களில்,Blood Falls எனப்படும் ரத்த நீர்வீழ்ச்சி ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது.

ஆம், ரத்த நீர்வீழ்ச்சி நீங்கள் படித்தது சரி தான். இந்த படத்தை பார்த்தப்போதே பலருக்கு திடுக்கிட்டிருக்கும். அன்டார்டிகா கண்டத்தில் தான் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

வெள்ளை பனி கட்டிகள் மீது கரை படிந்தப்படி சிவப்பு நிற நீர், பாய்கிறது. இந்த சிவப்பு நிற நீர் எங்கிருந்து உருவாகிறது, எப்படி உருவாகிறது என்பதற்கான விடையை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. ஆனால் இந்த நீரில் உள்ள இரும்பு தன்மை தான் இந்த நீர்வீழ்ச்சி சிவப்பு நிறமாக காட்சி அளிக்க காரணமாக கூறப்படுகிறது.

மேலும் சமீபத்திய ஆராய்ச்சியில் இந்த பனி கட்டிகளுக்கு கீழ் சுமார் 1300 அடியில் வாழும் நுண்ணுயிரிகள் நீரின் இரும்பு மற்றும் சல்பரால் பாதுகாக்கபடுவதாக கூறப்படுகிறது.

#தேர்போகி விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக