வியாழன், 17 நவம்பர், 2016

நாட்டு நடப்பு..!!

டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானி.!!

யாழ்ப்பாணம் வல்லையைச் சேர்ந்த அர்ச்சனா செல்லத்துரை டென்மார்க்கில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்.

ஆஸ்திரியாவில் விமானிக்குரிய  விசேட கல்வியை பெற்று டென்மார்க் திரும்பியியுள்ள அர்ச்சனா செல்லத்துரை வர்த்தக விமான சேவையில் தமிழ் பெண்கள் விமானியாக வலம் வரவுள்ளார்

போயிங் எயார் பஸ் விமானச் சேவையில் இணைந்துகொள்ள வாய்ப்பினை  நோக்கி  தான் சென்று கொண்டிருப்பதாக அவரது முகப்புத்தகத்தில் பதிவுட்டுள்ளார்.

டென்மார்க்கில் ஆசிரியர் பயிற்சி முடித்து டேனிஸ் மொழி ஆசிரியையாக இருந்த அர்ச்சனா விமானியாக படிப்பதற்காக அமெரிக்கா சென்று மியாமியில் டீன் இன்ரநாஷனல் விமானிகள் கற்பித்தல் கல்லூரியில் படித்து சித்தியடைந்தார்.

இறுதிப் பரீட்சையின் போது விமானத்தை அமெரிக்காவின் மியாமியில் இருந்து அட்லாண்டிக் சமுத்திர வழியாக தனி ஒருவராக ஆறு மணி நேரம் பறந்து சென்று மூன்று விமான நிலையங்களில் விமானத்தை இறக்கி ஏற்றி சிறப்பு சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பெற்ற ஏப்.ஏ.ஏ லைசென்சை ஐரோப்பாவில் பயன்படுத்த  வேண்டுமானால் அதை ஐரோப்பாவிற்கான ஈ.ஏ.எஸ்.ஏ என்ற தொழில்முறை சார்ந்து  மாற்ற வேண்டும்.

இதற்காக டென்மார்க்கில் லேண் ரு பிளைட் என்ற விமானக் கல்லூரியில் கற்று 14 பரீட்சைகள் எடுத்து பின்னர் சுவீடனிலுள்ள டைமன்ட் பிளைட் கல்லூரியில்  தனியான பறப்புக்களை பறந்து ஐரோப்பிய சட்டங்களுக்கு அமைவாக தனது அனுமதியினை  மாற்றிக்கொண்டுள்ளார், அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் சன் எயார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து இ டென்மார்க் ஓகூஸ் நகரத்திலுள்ள கிறைபேர்ட் விமான நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரியா சென்று விமானப்பறப்புக்கான ரைப்ரைட்டிங் எனப்படும் கற்கையை விசேடமாகக் கற்று சென்ற வாரம் அல்சி எக்ஸ்பிரஸ் விமானத்தை கச்சிதமாக ஓட்டி சித்தியடைந்தார்.

இந்த விமானத்திலேயே சமீபத்தில் பிரான்சில் நடந்த ஐரோப்பிய #உதைபந்தாட்டத்திற்காக# ஜேர்மன் நாட்டு அணி ஏற்றிச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த திரைப்பட பின்னணி பாடகியாகவும் தேர்வாகியுள்ள அர்ச்சனா, சங்கீதத்தையும், வயலின், புல்லாங்குழல், போன்ற வாத்தியங்களையும் முறைப்படி கற்று பரத நாட்டியத்தையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#தேர்போகி விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக