திங்கள், 21 நவம்பர், 2016

தமிழக இளம் விஞ்ஞானிக்கு ஜனாதிபதி விருது..!!

விவசாயிகளுக்கு சோலார் டிராக்டரை உருவாக்கி சாதனை!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி‌யைச் சேர்ந்த 10- ஆம் வகுப்பு மாணவன் ஜனாதிபதி விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரை சேர்ந்த சாரதி சுப்புராஜ், செண்பகவல்லி தம்பதியின் மகன் சிவ சூர்யா.

இவர் கோவில்பட்டியில் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

 சிவசூர்யா இந்த இளம் வயதிலேயே 8 புதுமைகளை கண்டுபிடித்து இந்தியாவின் ‘இளம் விஞ்ஞானி 2016’ என்ற விருதினை பெற்றுள்ளார்.

 அதுமட்டுமின்றி ரஷ்யா நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்றில் பயிற்சி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

தற்போது அவருக்கு மற்றொரு மணிமகுடமாக குடியரசுத்தலைவர் ப்ரணாப் முகர்ஜியிடம் விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் பிரிவில் மாணவன் சிவசூர்யாவிற்கு ப்ரணாப் முகர்ஜி ’ இளம் விஞ்ஞானி 2016’ விருதினை வழங்கி கௌரவப்படுத்தினார். வெள்ளி மெடல், 10 ஆயிர ரூபாய் ரொக்க பணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிவசூர்யா தனது கண்டுபிடிப்புக்களுக்கு சிகரம் வைத்தாற் போல் உருவாக்கியது தான் விவசாயிகளுக்கு உதவும் வகையில் சூரிய ஒளியில் இயங்க கூடிய டிராக்டர். இந்த டிராக்டரை சூரிய ஒளியில் செல்போன் மூலம் இயங்கும் வகையில் வடிமைத்துள்ளார். இதனை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எளிதில் இயக்கலாம். மிகக்குறைந்த செலவில் எளிதில் இதன் மூலமாக உழவு செய்ய முடியும் என்கிறார் சிவசூர்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக