புதன், 23 நவம்பர், 2016

”Poison dart frog” இந்த வகை தவளையை பற்றி பலருக்கு தெரியாது.??

பொதுவாக தவளை என்றாலே பலருக்கு பிடிக்காது. அதை கண்டாலே அறுவெறுப்பாக இருக்கும்.

அதிலும் மழை காலங்களில் சொல்லவே வேண்டாம் இங்கும் அங்கும் எக்கசக்கமாக தாவி கொண்டிருக்கும். அதிலும் நம் ஊர் மக்கள் அதை கண்டால் கல்லை விட்டு எறிவதும், கையில் விடித்து விளையாடுவதுமாய் இருப்பார்கள்.

ஆனால் ”Poison dart frog” மற்ற தவளைகளில் இருந்து முற்றிலும் வேறுப்படுகிறது. பளீர் நிறத்துடன் தோன்றும் இந்த வகை தவளை மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளான, பொலிவியா, கோஸ்டா ரிகா, பிரெசில், கொலம்பியா, ஈக்வேடார் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

பகல் மற்றும் இரவில் காணப்படும் இந்த தவளைகளின் பளீர்  நிறம், அதை தாக்க வரும் மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கு ஒரு எச்சரிக்கை குறியீடு.

இந்த வகை தவளைகள் மிகவும் ஆபத்தானவை, காரணம் இவற்றில் இருக்கும் விஷ தன்மை. இந்த  தவளையை ஒருமுறை தொட்டால் போதும் அடுத்த சில வினாடிகளில் மரணம் நிச்சயம். ஏன்னெனில் இந்த தவளையின் விஷம் இதன் தோல் பகுதியில் தான் உள்ளது.

விளையாட்டிற்கு கூட இந்த வகை தவளையை தொடாமல் இருப்பதும், ஏன் அதன் அருகில் செல்லாமல் இருப்பதும் நல்லது. இவை பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும் ஆனால் இது தரும் விளைவுகள் மிகவும் கொடியது.

#தேர்போகி விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக