சனி, 19 நவம்பர், 2016

மோடியை கேவலமாக பேசிய இளைஞர்... கோபத்தில் பளார் என்று அறைந்த இஸ்லாமியப் பெண்..!



தேசம் இன்று ஒரு பெரும்  சத்திய சோதனையில் சிக்கியுள்ளது. பிரதமர் கருப்பு பணத்திற்கு எதிரான  ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்..!

மக்கள் கோபத்துடன் இருந்தாலும் நாளைய பாரதம் ஊழல் அற்ற லஞ்ச லாவண்யங்கள் இல்லாத ஒரு  தேசமாக மாறும் என்கிற அசாத்திய நம்பிக்கை கொண்டு  பொறுமையுடன் சமாளிக்கிறார்கள்..!

உலகமே  இன்று நமது பாரதப் பிரதமரை பிரமிப்போடு பார்க்கிறது.இந்த சூழலில் நேற்று முன் தினம் #உதய்பூர் எனும் ஊரில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

#ருகையா பேகம்..கல்லூரி மாணவி இவர். தங்கள் வீட்டில் உள்ள சில ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வந்து வரிசையில் நின்றுள்ளார்.

அதிகாலை முதலே கூட்டம் கூடி விடுவதால் கடும் குளிரையும் பொருட் படுத்தாமல் மக்கள் வந்து குவிந்து விடுகின்றனர். அங்கு பணம் மாற்ற வந்தவர் ராஜ்வீர் என்கிற இளைஞர்.

அவர் காலை முதலே மத்தியஅரசு பற்றி கடுப்பில் இருந்துள்ளார் போலும். மதியம் ஒருமணியளவில் ராஜ்வீர், பிரதமர் மோடி பற்றி மிக ஆபாசமாக கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அருகே நின்ற ருகையா பேகம் அதிர்ச்சி அடைந்தார். கோபத்துடன் திரும்பி ராஜ்வீர் கன்னத்தில் பளார், பளார் என்று நாலு அறை கொடுக்க,   ஆடிப்போனார் ராஜ்வீர்.
மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பார்த்தால் படித்தவன் போல் இருக்கிறாய். ஒரு நல்ல திட்டத்தை புரிந்து கொள்ளாமல்,பிரதமரை சாடுவது சரியா..? இந்த திட்டம் நீயும், உன் குடும்பமும் நல்லா இருக்கணும்னு தானே..” என்று  ஆத்திரம் தீர திட்டியுள்ளார்.

பொது  மக்களும் ராஜ்வீரை கடுமையாக எச்சரிக்கை செய்தனர். சில இளைஞர்கள் சகோதரி ருகையா பேகத்திற்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்..!

அசத்தல்..! இந்த  சகோதரியை வாழ்த்துங்கள் நண்பர்களே..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக