புதன், 23 நவம்பர், 2016

உலகில் 48 நாடுகள் அழியப்போகும் ஆபத்து!!… வெளியான அதிர்ச்சி தகவல்.!!

புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள 48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் 2050ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த இந்த 48 நாடுகளும் தீர்மானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால, புவி வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டே வருகிறது, இதனால் தான் பனிப்பாறைகள் உருகுகின்றன. இவை தண்ணீராக உருமாறி கடல் நீரில் கலக்கிறது. இதனால் கடலின் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதே நிலை நீடித்தால், உலகின் பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது . தற்போது இதை சமாளிப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஐநாவில் தற்போது நடைபெற்று வரும் பருவ நிலை மாற்றம் குறித்த மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர சில அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதை, சுமார் 1.5 டிகிரி செல்சியல்ஸ் அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று இந்த 48 நாடுகளும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 2050 ஆம் ஆண்டிற்குள் 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 48 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இலங்கை, நேபால், பூட்டான், எத்தியோப்பியா, வியட்நாம், உள்ளிட்ட 48 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

#தேர்போகி விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக