வெள்ளி, 18 நவம்பர், 2016

அடுத்த பசுமைப்புரட்சியை அடையாளம் கண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு…

பொருளாதார ரீதியில் வளரும் நாடுகளின் உணவு உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லதொரு புரட்சிகரமான ஆய்வு முடிவுகளை தாம் அடையாளம் கண்டறிந்திருப்பதாக ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

விளைபயிர்களே உலக மக்களுக்கான உணவளிக்கின்றன.
ஆனால் அதில் மிகப்பெரிய நெருக்கடி ஒன்று நெருங்கி வருகிறது.

ஏற்கனவே வளர்ந்து வரும் நாடுகளில் பல லட்சம்பேர் பசியோடு வாழும் சூழலில் தொடர்ந்து வேகமாக அதிகரிக்கும் பல கோடி மக்களுக்கு எப்படி போதுமான உணவளிப்பது என்பது மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
இதற்கான தீர்வாக சூரிய ஒளி மூலம் தாவரங்கள் சர்க்கரையை தயாரிக்கும் photosynthesis எனப்படும் ஒளிச்சேர்க்கையை மாற்றியமைக்கும் முயற்சியில் தாங்கள் வெற்றிபெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
தமது கண்டுபிடிப்பை உணவுதானிய தாவரங்களில் நிறைவேற்றினால் அதிகரித்துவரும் உலக மக்கள் தொகைக்கு அவசியம் தேவைப்படும் உணவு உற்பத்தியின் அடுத்த புரட்சியாக அது அமையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

#தேர்போகி விஜய்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக