திங்கள், 21 நவம்பர், 2016

தங்கச்சுரங்க நிறுவனத்திற்கு கழுகளால் வந்த கோடிக்கணக்கான நஷ்டம்.!!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஐவ்ஸ் என்ற தங்கச்சுரங்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தங்கம் எங்கு கிடைக்கும் என்ற ஆராய்ச்சியை நடத்தி வருகிறது.

இதற்காக ஏரியல் வியூவுடன் கூடிய பறக்கும் கேமிராக்களை அந்தரத்தில் தொங்கவிட்டு அதன் மூலம் படமெடுத்து ஆராய்ந்து வந்தது.

இந்நிலையில் இந்த அந்தரத்தில் தொங்கும் கேமிராக்களுக்கு கழுகுகளால் எவ்வித தொந்தரவும் வந்துவிடக்கூடாது என்பதால் இந்த கேமராவையே கழுகு போல இந்நிறுவனம் வடிவமைத்தது

ஆனால் ஒருசில நாட்கள் மட்டும் ஏமாந்த நிஜமான கழுகுகள் ஒரு கட்டத்தில் இவை போலி என்று தெரிந்து கொண்டு அந்த கேமிராக்களை அடித்து நொறுக்கியுள்ளது. இதனால் சுரங்க நிறுவனத்திற்கு ஏழு கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமாம்.

#தேர்போகி விஜய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக